சூசகமாக நண்பனை வாரி காமெடி பண்ணிய ரஜினி.. ஆழ்வார்பேட்டை ஆளுக்கு சொன்ன அறிவுரை

Rajini indirectly spoke about Kamal: ரஜினி இன்று புகழ்பெற்ற காவேரி மருத்துவமனையின் மற்றொரு கிளையை வடபழனியில் திறந்து வைத்தார். அப்பொழுது அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளருக்கு அவர் பாணியில் ஓர் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார்.

திறப்பு விழாவில் ரஜினி கூறுகையில், சென்னையில் மிகவும் தரமான மருத்துவமனையில் ஒன்று காவேரி ஹாஸ்பிடல். இங்கே பலவிதமான வெளிநாட்டில் உள்ள சிகிச்சைகள் மேற்கொள்ள எல்லா வசதிகளும் ஒன்று. இது சென்னைக்கு ஒரு அடையாளம் என்று கூறினார்.

ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை பல சினிமா நட்சத்திரங்களுக்கு ஒரு வீடு போன்றது. பல படங்களில் சூட்டிங் அங்கே நடைபெற்று இருக்கிறது.சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை எல்லோருக்கும் அந்த மருத்துவமனை மிகவும் ராசியான ஒன்று.

ஆழ்வார்பேட்டை ஆளுக்கு சொன்ன அறிவுரை

டாக்டர் கலைஞர் கருணாநிதி கூட உடம்பு சரியில்லை என்றால் இந்த மருத்துவமனைக்கு தான் முதலில் அழைத்து வரப்படுவார். இந்த மருத்துவமனையின் மற்றொரு கிளை திறந்து வைப்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது என பேசினார்.

இப்படி ரஜினி பேசிக் கொண்டிருக்கும்போது தனது நண்பன் கமலை வைத்து ஒரு காமெடி கூட பண்ணிவிட்டார். ஆழ்வார்பேட்டையில் கமல் வீடு இருக்கிறது அதன் அருகில் தான் காவேரி மருத்துவமனையும் இருக்கிறது என்று ஒரு அடையாளத்தோடு மக்கள் விலாசம் கூறுவார்கள் ஆனால் இப்பொழுது தலைகீழாக மாறி உள்ளது.

காவேரி மருத்துவமனை பக்கம் தான் கமலின் வீடு இருக்கிறது என்று விலாசம் கூறும் அளவிற்கு காவிரி மருத்துவமனை வளர்ந்து விட்டது ஆனால் கமல் அரசியலில் இறங்கி இப்பொழுது புகழ் மங்கி இருக்கிறார் என சூசகமாக கூறிவிட்டார் ரஜினி