வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இயக்குனரை அவமதித்த ரஜினி.. வாயை பிளக்கும் அளவிற்கு வசூலை கொடுத்த அந்த படம்

சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த வகையில் நடிகர்கள் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து தனது படத்திற்கான வெற்றியை நிர்ணயித்துக் கொள்கின்றனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் வளர்ந்து வரும் சமயத்திலும் இயக்குனருக்காக கதையைக் கேட்காமலேயே அவருடைய படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

மேலும் நடிகர் விஜயகாந்த் மற்றும் மோகன் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் படமும் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினியை நாடியுள்ளார் அந்த இயக்குனர்.  பொதுவாகவே எந்த ஒரு நடிகர்களுக்கும் படத்தின் கதையை சொல்லுவதே கிடையாதாம். 

Also Read: 28 வருடங்களுக்கு முன்னால் வந்த ரஜினியின் படம்.. இப்போதும் டிஆர்பியில் நம்பர் ஒன் இடம்

அதேபோல தான் ரஜினியை எப்படியோ சம்மதிக்க வைத்து தனது படத்தில் நடிக்க வைத்தார். இப்படியாக இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் ரஜினியை வைத்து முதன் முதலில் எடுத்த படம் தான் ராஜாதி ராஜா. இப்படத்தில் நடிப்பதற்காக ஒத்துக் கொண்டோமே என்று கடமைக்கு நடித்துக் கொடுத்தார். இப்படியாக நண்பர்களிடம் கூட  இந்தப் படம் தனக்கு வெற்றியை பெற்று தராது என்பது போல் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

ஆனால் இப்படம் இவரே எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றி பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் அந்த காலத்திலேயே படம் வெளியாகிய முதல் நாளே 95 லட்சம் வரை வசூல் பெற்றது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்ட இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: மீண்டும் பேய் படத்தில் நடிக்கப் போகும் ரஜினி.. சுவாரஸ்யமான தகவலை போட்டு உடைத்த பிரபலம்

மேலும் 1989 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அதிலும்  இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல், 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் முதல் முதலாக 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படம் இதுவே ஆகும்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. ஆனாலும் இவரின் திரை வாழ்க்கைக்கு இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது என்றே சொல்லலாம். அதிலும் இயக்குனரை அலட்சியமாக நினைத்து விட்டார் ரஜினி. ஆனால் இவரே வாயடைத்து நிற்கும் அளவிற்கு இயக்குனர் தனது படத்தின் மூலம் பெரும் சாதனையை செய்துள்ளார். இவ்வாறாக சுந்தரராஜனை தவறாக எண்ணி விட்டோம் என மனம் வருந்தியுள்ளார்.

Also Read: அரசியல் ஆசையால் சர்ச்சைக்குள்ளான 5 பிரபலங்கள்.. புலி வருதுன்னு பூச்சாண்டி காட்டிய சூப்பர் ஸ்டார்

Trending News