வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

நெட்டிசன்களால் பங்கமாய் கலாய்க்கப்படும் ரஜினி.. அம்பானி வீட்டு விருந்தினால் மதி மயங்கிய சூப்பர் ஸ்டார்

Rajinikanth: தலைவரை சுற்றி தேவையில்லாத பிரச்சனை வருகிறதா அல்லது அவரே பிரச்சனையில் போய் மாட்டிக்கொள்கிறாரா என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. அட! ரஜினி இந்த இடத்திற்கு வராருப்பா என்ற ஒரு செய்தி கேட்டதும், அவரை ரவுண்டு கட்டி மைக்கை நீட்டுவதும், ரஜினியும் மைக்கை பார்த்ததும் தன்னுடைய கருத்து சுதந்திரத்தின் திறமையை காட்டி, பின்னர் அந்த கருத்து சுதந்திரமே அவருக்கு எதிராக அமைவதும் வழக்கமாக போய்விட்டது.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள், நான் தான் பா ரஜினி என தலைவர் மைக்கில் பேசும்போதெல்லாம் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் போய்விடுகிறது. அப்படித்தான் இப்போது முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்ட ரஜினியை பேட்டி எடுக்க மீடியாக்கள் கூடிய போது, அவர் பேசிய விஷயம் இப்போது பெரிய அளவில் கேலிக்குள்ளாகி இருக்கிறது.

கடந்த வாரத்திலிருந்து இந்தியா முழுக்க பெரிய அளவில் பேசப்படுவது அம்பானி வீட்டு கல்யாணம் தான். ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணத்திற்கான கொண்டாட்ட வைபோகங்கள் உலக அளவில் டிரண்டாகி வருகிறது. சினிமா, கிரிக்கெட், அரசியல் என எல்லா துறையில் இருப்பவர்களையும் கொண்டாட்டத்திற்கு வரவைத்து, விருந்து கொடுத்து வருகிறார் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி.

Also Read:லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து கமுக்கமாக உதவி செய்த ரஜினி.. நன்றி மறவாமல் குலசாமியாக வழிபடும் 2 நடிகர்கள்

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யா உடன் கலந்து கொண்டார். ரஜினி குடும்பத்திற்கு என்று தனியாக விமானம் எல்லாம் ஏற்பாடு செய்து சிறப்பாக கவனித்துவிட்டார் அம்பானி. ஏற்கனவே அம்பானி குடும்பத்தின் இந்த வரவேற்பை பற்றி சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளி விட்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யா.

இது போதாது என்று விருந்து முடித்து விட்டு வந்த ரஜினியிடம் அந்த திருமணத்தை பற்றியும் மீடியாக்கள் கேள்வி கேட்டதும், இந்த விழா இந்திய நாட்டுக்கே பெருமை என தலைவர் யோசிக்காமல் ஒரே பதில் கொடுத்து விட்டார். தலைவரே, நீங்களும், அம்பானியும் வாடா போடா பிரண்ட்ஸாக கூட இருக்கலாம். உங்க வீட்டுக்கு அவங்க வரலாம், அவங்க வீட்டுக்கு நீங்க போகலாம், ஆனால் அவர் மகனுக்கு கல்யாணம் நடத்துவது எந்த விதத்தில் இந்தியாவிற்கு பெருமை என நெட்டிசன்கள் ரஜினியின் இந்த வார்த்தையை ஹைலைட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு பக்கம் அவருடைய தீவிர விசுவாசிகள் தலைவரே மைக் கெடச்சா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க, இதுக்கு நாங்க எப்படி முட்டு கொடுக்கிறது என்று தெரியலையே என புலம்பி வருகிறார்கள். சரி நண்பர் வீட்டு கல்யாணத்திற்கு போயிட்டு வந்த குஷியில் தலைவர் ஏதோ ரெண்டு மூணு வார்த்தைகளை எக்ஸ்ட்ரா பேசிவிட்டார் வழக்கம் போல நம்ம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என நடுநிலையான கமெண்ட்களையும் இணையவாசிகள் தெளித்து வருகிறார்கள்.

Also Read:அடுத்த பயோபிக் படத்திற்கு ரெடியான ரஜினி மகள்.. தோனி பட வெற்றியால் ஐஸ்வர்யாவின் பேராசை

Trending News