தன் கையை வைத்தே கண்ணை குத்தப் போகும் ரஜினி.. ஐஸ்வர்யாவால் விழி பிதுங்கி நிற்கும் சூப்பர் ஸ்டார்

Actor Rajini: ரஜினி இப்போது தலைக்கால் புரியாத சந்தோஷத்தில் இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் ஜெயிலர் கொடுத்த மாபெரும் வெற்றி தான். நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதுவரை தமிழ் சினிமா கண்டிடாத வசூல் சாதனையை இப்படம் பெற்றிருக்கிறது.

இதற்கு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் தலைவர் 170 படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்திலும் ரஜினி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read : மன்மதனாய் விளையாடிய ரஜினியை செல்லமாய் அடித்த சிவாஜி.. பிளேபாய்யாய் 2 ஜாம்பவான்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

இந்த சூழலில் ரஜினி தன் கையை வைத்தே கண்ணை குத்தப் போகிறார் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அதாவது ஜெயிலர் படம் இப்படி ஒரு வெற்றி அடையும் என்பதை ரஜினியே நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஆனால் இந்த படத்திற்கு முன்பு யோசிக்காமல் அவர் ஒப்பந்தமான படம் தான் லால் சலாம்.

இந்தப் படத்தால் ரஜினிக்கு நிச்சயம் சறுக்கல் வருவது உறுதி. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடமாக தனது அப்பாவை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற கனவில் இருந்தார். ரஜினி ஒவ்வொரு முறையும் மறுத்து வந்த நிலையில் லால் சலாம் படத்தின் கதையை கேட்கும் போது இதில் மோகன்லால், மம்முட்டி ஆகியோரில் யாரையாவது கேமியோ தோற்றத்தில் போடலாம் என்று தான் யோசனையில் இருந்துள்ளனர்.

Also Read : ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், இறைவன் தயவால் ஆளுநர் பதவி கிடைக்கும்.. பரபரப்பை கிளப்பிய உடன்பிறப்பு

ஆனால் ரஜினி தானே இந்த படத்தில் நடிப்பதாக மகளிடம் ஒத்துக்கொண்டு உள்ளார். இப்போது ஜெயிலர் வெற்றியால் ஏறுமுகத்தில் இருக்கும் ரஜினி லால் சலாம் படத்தால் பின்னடைவை சந்திக்க கூடும். இதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ன செய்ய வேண்டும் என்றால் ரஜினியின் புகைப்படத்தை போடாமலேயே இந்த படத்தை ப்ரோமோஷன் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் மிகப்பெரிய எழுத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ரஜினியின் அடுத்த வளர்ச்சிக்கு பாதிப்பு அடையாது என்பதை வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார். மேலும் லால் சலாம் படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

Also Read : ஒன்றரை கோடி காரு போதும், ரஜினி எடுத்த தடாலடி முடிவு.. வாங்கிட்டு நான் பிரச்சனையில சிக்க முடியாது