திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாவட்ட எஸ்.பி-யாக ரவுண்டு அடிக்க போகும் ரஜினி.. தலைவரின் அடுத்த படத்திற்கான புது அப்டேட்

Actor Super Star Rajinikanth: ரஜினி, நெல்சன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படம் இறுதி கட்டத்தை முடித்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்கு ரஜினி மற்றும் நெல்சன் இருவருமே வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இருவருக்குமே கடைசியாக வெளிவந்த படங்கள் அந்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

அடுத்ததாக ரஜினி, அடுத்து எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஜெய் பீம் இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். மேலும் ஜெய் பீம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் ரஜினியின் 170வது படமும் அதே போல் அமைய வேண்டும் என்பதற்காக இந்த இயக்குனருடன் கூட்டணி வைக்கிறார்.

Also read: விஜய் சேதுபதிக்கு ரஜினி கொடுத்த தரமான அட்வைஸ்.. ஓசில வேலை பார்த்தா காணாம போயிடுவ

இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முக்கால்வாசி இவர் நடித்த போலீஸ் சம்பந்தமான படங்கள் அனைத்தும் இவருக்கு கை கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அலெக்ஸ்பாண்டியன் கேரக்டர் மற்றும் தர்பார் இந்த படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதுபோல இந்தப் படத்திலும் கன்னியாகுமரி எஸ் பி யாக ரவுண்டு அடிக்க போகிறார். அதனால் இப்படமும் இவருக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கான ஒவ்வொரு வேலைகளிலும் இறங்கி விட்டார்கள். அதற்காக நாகர்கோவிலில் இருக்கும் ஹெட் குவாட்டர்ஸ்க்கு சென்று படக்குழு சூட்டிங் சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து பார்த்து வருகிறார்கள்.

Also read: யோகா செய்தால் கோபம் குறையும்.. ரஜினி, சிவகுமாரை வைத்து நக்கலடித்த ப்ளூ சட்டை

ஆனால் ரஜினியை நேரடியாக இந்த இடத்திற்கு கூட்டிட்டு போய் படப்பிடிப்பை நடத்தினால் தேவையில்லாத கூட்டங்கள் கூடும். அதனால் பல பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் இதற்கு வேறொரு ஐடியாவை செய்ய இருக்கிறார்கள். அதாவது திருவனந்தபுரத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி செட் போட்டு அங்கு வைத்து இதற்கான படப்பிடிப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி செய்தால் ரஜினிக்கும் ரொம்ப வசதியாக இருக்கும். ஏனென்றால் படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்றால் சென்னையில் இருந்து ஈஸியாக திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு பிளைட் மூலமாக வந்துவிடலாம். அவருக்கும் எந்தவித அலைச்சலும் இருக்காது என்பதால் இங்கேயே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து இனி ஒவ்வொரு அப்டேட்டுகளும் வர இருக்கிறது.

Also read: அதல பாதாளத்திற்கு சென்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்.. 13 நாள் கால் சீட்டில் ரஜினி செய்த மேஜிக் ஹிட் படம்

Trending News