வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் மீது தலைவருக்கு அப்படி என்ன கரிசனம்.. மொத்த கனவையும் இறக்கி வைக்கிற நேரம் வந்துருச்சு

Rajini is interested in Vijay politics: தமிழ் சினிமாவின் முன்னணி ஆளுமைகளாக இருக்கும் ரஜினி கமல் விஜய் மூவரும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் தான்.

இதில் ரஜினி கொஞ்சம் விதிவிலக்காக அரசியலில் ஈடுபடாமலே மக்களுக்கான தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

அரசியலுக்கு வருவது என்பது காலத்தின் கையில் தான் உள்ளது என்று கூறி வந்தவர், சில வருடங்களுக்கு முன் உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் கொண்டனர். மீண்டும்  நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். இதற்கு நேர்மாறாக தளபதியின் தரமான செய்கை அமைந்தது.

பதுங்கி பாயும் புலியாக சாணக்கிய தந்திரத்துடன், அரசியலில் ஈடுபடும் முன்பே பல்வேறு மக்கள்பணி செய்து தனது ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து அதிரடியாக அரசியலில் குதித்துள்ளார் தளபதி.

கடந்த ஆண்டு வாரிசு மற்றும் ஜெயிலர் இசை வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய போட்டித் தாறுமாறாக ஓடியது.

இதனைத் தொடர்ந்து லால் சலாம் இசை வெளியீட்டில் விஜய்க்கு ஆதரவாக பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தலைவர்.

தன்னால் முடியாததை, தான் பார்த்து வளர்ந்த சக கலைஞன் தளபதி அவர்கள், அரசியலில் சிறப்பாக பங்களிக்கிறார் என்று மூத்த கலைஞராக மகிழ்ச்சி கொண்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அது மட்டும் இன்றி, விஜய்யோட அரசியல்ல ரஜினி ரொம்ப ஆர்வம் காட்டுகிறாராம்.  நிருபர்கள் சந்திப்பின் போதும் விஜய்யின் அரசியலைப் பற்றி கேட்கிறாராம்.

நிருபர் ஒருவர் விஜய் பத்தி கேட்கிறீர்கள் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதற்கு எனக்கு எப்போதும் விஜய் மீது அக்கறை இருக்குன்னு சொல்லிக் கொண்டாராம். 

2026 சட்டசபை தேர்தலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆதரவு தெரிவிப்பாரா..?

சூப்பர் ஸ்டார், விஜய்க்கு சப்போர்ட் பண்றது கன்ஃபார்ம் தான்! ஆனால் இப்போதைக்கு பிஜேபி தலைமைக்கு பயந்து எந்த ஒரு ஆதரவையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

2024 தேர்தல் முடியட்டும் சிறப்பான, தரமான சம்பவம் இருக்கு. வருகின்ற லோக்சபா தேர்தலில் வரும் முடிவை பார்த்துவிட்டு,

மத்திய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனில் தலைவரின் சப்போர்ட் கண்டிப்பாக விஜய்க்கு தான். கண்டிப்பாக 2026 தேர்தலில் வென்று விஜய் முதல்வர் ஆவார் என்ற கனவுடன் இருக்கிறார் தலைவர்.

Trending News