சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

மகள்களிடம் மாட்டி விழி பிதுங்கி நிற்கும் ரஜினி.. ஐஸ்வர்யா எடுத்துள்ள அதிரடியான முடிவு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதிலும் இப்படத்தில் சிறைத்துறையில் உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்நிலையில் ரஜினி தனது மகளின் வேண்டுகோளுக்காக இவர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

இவரது இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதனை அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தையும் இயக்கி இருந்தார். தற்பொழுது மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தந்தை ரஜினிகாந்தை வைத்தே தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். 

Also Read: ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்

இதனைத் தொடர்ந்து விவாகரத்திற்கு பிறகு எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார் ஐஸ்வர்யா. தன்னை எப்பொழுதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள நினைக்கும் இவர் தற்பொழுது தனது அடுத்த படத்தின் பயணத்தை தொடங்கியுள்ளார். ரஜினிக்கு படத்தின் கதையே இன்னும் சரியாக தெரியாத நிலையில் மகளின் மேல் உள்ள நம்பிக்கையில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர் இயக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் லால் சலாம். ஏற்கனவே இரண்டாவது மகள் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்த கோச்சடையான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம். 

Also Read: மயில்சாமி நடித்த ரஜினியின் 2 படங்கள்.. கடைசி வரை நிறைவேறாமல் போன மற்றுமொரு ஆசை

இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கும் படத்திற்கு ரஜினி என்ன சொல்வது என்று தெரியாமல் நடித்து வருகிறார். படக்குழுவும் தலையெழுத்து என அதில் வேலை செய்து வருகின்றனர். இந்த படம் பான் இந்தியா இந்தியா படமாக உருவாகி வருகிறது. மேலும் கேரளாவில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மகாபலிபுரம் படத்தின் எழுத்தாளரை வைத்து இப்படத்தை எடுத்து வருகிறார்.

அதிலும் ஐஸ்வர்யா, தங்கை படத்தில் நடித்து கொடுத்தது போலவே  எனது படத்திலும் நடித்துக் கொடுக்க வேண்டும் என தனது அப்பாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே ரஜினியை அக்கா அவமானப்படுத்திய நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யாவும் படம் எடுக்கப் போவதாக அடம் பிடித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் இவர்களைப் பெற்றதற்கு சும்மாவே இருக்கலாம் என்பது போல் மகள்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி  நிற்கிறார்.

Also Read: மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும்.. இறுதி அஞ்சலியில் ரஜினி கொடுத்த வாக்குறுதி

Trending News