புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினியே அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என கூறிய ஒரே நடிகர்.. தலைமையை வாரிக் கொடுத்த தலைவர்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நடிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் பெரிய அளவில் பேசப்படுவார். அவருக்கு ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்படுகிறது.

இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, மற்ற மொழி படங்களிலும் சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் விஜயின் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சில பிரபலங்கள் தளபதியை பெருமையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.

Also Read : ரஜினியை மிரட்டிய 5 பாலிவுட் வில்லன்கள்.. தளபதி படத்தில் அடிச்சிக்க முடியாது கலிவரதன் அம்ரீஷ்

ஆனால் இந்த கருத்துக்கு விஜய் சம்மதம் மற்றும் மறுப்பு எதுவுமே தெரிவிக்காமல் மௌனம் காத்தார். இதுவே இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. மேலும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியதால் ரஜினியின் ரசிகர்கள் அவரின் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

இவ்வாறு ரஜினி ரசிகர்களே சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறு நடிகருக்கு கொடுக்க விருப்பம் அல்லாமல் உள்ளனர். ஆனால் காலத்தில் ரஜினியே முன்வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு நடிகரை பார்த்து பெருமையாக மேடையில் பேசி புகழ்ந்து தள்ளி உள்ளார். இந்தச் செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

Also Read : ரஜினி, பிரபு போல் மற்றொரு அண்ணன் தம்பி.. சினிமாவில் வெற்றிகரமான சகோதரர்கள்

அதாவது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ரஜினி அடுத்த சூப்பர் ஸ்டார் விக்ரம் தான் என்று விழா மேடையில் கூறியிருந்தார். இவ்வாறு சூப்பர் ஸ்டாரே தனது பட்டத்தை வாரிக் கொடுத்துள்ளார்.

ஏனென்றால் ரஜினியைப் போல விக்ரமும் சினிமா பின்புலம் இல்லாமல் தனது கடின உழைப்பின் காரணமாக இந்த இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி சினிமாவுக்காக கமலை போல விக்ரமும் பல அர்ப்பணிப்புகள் செய்யக்கூடியவர். ஆகையால் தான் ரஜினியே முன்வந்த தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விக்ரமுக்கு கொடுத்துள்ளார்.

Also Read : விஜயை வளர்த்த பிரபலத்தை ஒதுக்கிய எஸ்.ஏ.சி.. கேட்காமல் உதவி செய்த ரஜினி.!

Trending News