செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினி, விஜயகாந்த் கொடுத்த மோசமான ஃபெயிலியர்.. நம்ப வச்சு கழுத்தறுத்த பாரதிராஜா

இயக்குனர் இமயம் பாரதிராஜா பல இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். அதேபோல் பல நடிகர், நடிகைகளையும் தன் படத்தின் மூலம் அறிமுகமாக்கி மிகப்பெரிய உயரத்தை அடையச் செய்துள்ளார். பாக்யராஜ், மணிவண்ணன், வடிவுக்கரசி, ராதிகா, ராதா, ரேவதி என பலர் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான்.

கிராமத்தின் மண்வாசம் மாறாமல் படத்தை எடுப்பதில் பாரதிராஜா கை தேர்ந்தவர். இந்நிலையில் அறிமுக நடிகர்கள் அல்லது ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமானகாத நடிகர்களை ஹீரோவாக்கி மிகப்பெரிய ஹிட் படங்களை பாரதிராஜா கொடுத்துள்ளார்.

Also Read: பாரதிராஜாவின் மருத்துவ செலவை கூட கட்ட முடியாமல் இருக்கும் குடும்பம்.. உதவிய பெரும்புள்ளி

ஆனால் டாப் நடிகர்களுக்கு மோசமான படத்தைக் கொடுத்த சொதப்பி உள்ளார். காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்த பாரதிராஜா பெரிய ஹீரோக்களின் படங்களில் சொதப்பி உள்ளார். அதாவது ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் மோசமான அட்டர் ஃபிளாப் படத்தை கொடுத்துள்ளார்.

கமல் ரஜினி ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் 16 வயதினிலே என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை பாரதிராஜா கொடுத்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ரஜினி படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.

Also Read: பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

அதாவது பாரதிராஜா இயக்கம் மற்றும் தயாரிப்பில் 1987 இல் கொடி பறக்குது என்ற படம் வெளியானது. இதில் ரஜினிகாந்த், அமலா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதேபோல் பாரதிராஜா விஜயகாந்த்-க்கும் படுமோசமான தோல்வி படத்தை கொடுத்துள்ளார்.

1996 இல் அரசியல் படமாக விஜயகாந்த், ரோஜாவை வைத்து பாரதிராஜா இயக்கிய தமிழ்ச்செல்வன் படம் தோல்வியை தழுவியது. இவ்வாறு சின்ன ஹீரோக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த பாரதிராஜா பெரிய ஹீரோக்களுக்கு இப்படத்தை கொடுக்கவில்லை. மேலும் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் பாரதிராஜாவை நம்பி நடித்த ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் மோசமான ஃபெயிலியர் படத்தை கொடுத்து.

Also Read: அந்த ஹீரோயின் நடித்தாலே ஹிட் தான்.. தமிழ் தெரியாத நடிகையுடன் போராடிய ரஜினி, கமல், பாரதிராஜா

Trending News