வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இது டைகரின் கட்டளை.. வெளியானது ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி

Jailer Movie Second Single: ஜெயிலர் படம் ரஜினிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவருக்கு மட்டுமல்ல நெல்சன் திலீப் குமாரும் இந்த படத்தின் மூலம் தான் தன்னை மீண்டும் நிரூபிக்க பார்க்கிறார். அப்படிப்பட்ட படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் வெளியாகி பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதில் தமன்னா கவர்ச்சி ஆட்டம் போட்டு கலக்கி இருந்தார். ஆனால் இதே பாடலில் சூப்பர் ஸ்டார் கொஞ்சம் கூட ஒட்டாமல் தன்னுடைய ஸ்டைலில் இரண்டு ஸ்டெப்புகளை போட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.

Also Read: 5 கோடி வாங்கியதால் பரிதவிக்கும் லோகேஷ்.. தலைவர் படத்துக்கு வந்த முட்டுக்கட்டை

இந்த பாடலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதன் ட்யூன் எம்ஜிஆர் நடித்த படத்தில் வரும் இசை என அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டம் செய்தனர். அது மட்டுமல்ல இந்த பாடலின் வரிகள் சுத்தமாகவே புரியவில்லை என்றும் விமர்சித்தனர்.

எனவே வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற சிச்சுவேஷனில் இருக்கும் ஜெயிலர் பட குழு ரஜினிக்கு என்று இருக்கக்கூடிய மாஸ் பாடல் ஆன செகண்ட் சிங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறது. வரும் 17ஆம் தேதி ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் ‘டைகரின் கட்டளை’ என்ற பெயரில் அந்த பாடலை வெளியிட போகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Also Read: ரஜினியை போட்டு ஆட்டும் கர்மா.. டபுள் மடங்கு சம்பளம், விட்ட இடத்தை பிடித்த உலகநாயகன்

காவாலா பாடல் போல் இல்லாமல் இந்த பாடல் நிச்சயம் முழுக்க முழுக்க ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகுவதால் உலகம் முழுக்க படத்தின் ப்ரோமோசனை பட குழு தாறுமாறாக நடத்த திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் செகண்ட் சிங்கிள், படத்தின் எதிர்பார்ப்பை வேறு லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் நம்புகின்றனர். இந்தப் பாடலை பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Also Read: வேட்டையாடு விளையாடை விட பல மடங்கு ஜெயிலரில் மெனக்கிட்ருக்கேன்.. சஸ்பென்சை உடைத்த மாஸ்டர்

Trending News