திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அலப்பறையை ஆரம்பித்த தலைவர், நெல்சன் தல தப்புமா.? அனல் பறக்கும் ஜெயிலர் ட்விட்டர் விமர்சனம்

Jailer Twitter Review: இதோ அதோ என்று டென்ஷன் உடன் காத்திருந்த அந்த நாள் இன்று வந்தே விட்டது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் கொண்டாட காத்திருந்த ஜெயிலர் இன்று அதிரி புதிரியாக வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படம் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

jailer-reviews
jailer-reviews

அந்த வகையில் முதல் காட்சியை பார்த்துள்ள ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களும் கூறும் ஒரே விஷயம் தலைவரின் அலப்பறை மாஸாக இருக்கிறது என்பதுதான்.

jailer-positive-reviews
jailer-positive-reviews

Also Read: ஜெயிலர் ரம்யா கிருஷ்ணனுக்கு 3வது படமா?. படையப்பாவுக்கு முன்பே ரஜினியை ஆட்டிப்படைத்த நீலாம்பரி

அதிலும் சூப்பர் ஸ்டார், நெல்சன், அனிருத் காம்போ வேற லெவலில் இருப்பதாக கொண்டாடி வருகின்றனர். மேலும் யோகி பாபுவின் காமெடி, விநாயகன் செய்யும் வில்லத்தனம் என ஒவ்வொரு காட்சியிலும் நெல்சன் பட்டையை கிளப்பி இருப்பதாக பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

jailer-sambavam
jailer-sambavam

அது மட்டுமல்லாமல் இடைவேளை காட்சி புல்லரிக்க வைத்து விட்டதாகவும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். அதிலும் தலைவரின் காமெடி, ஆக்சன் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பான சீன் என ஒவ்வொன்றும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

jailer-goosebumps
jailer-goosebumps

Also Read: கமல், சூர்யா கொடுத்த தைரியம்.. பார்ட் 2 படத்திற்கு பழைய காதலியை ஜோடியாக்கும் சிம்பு

முதல் பாதியிலேயே மிரட்டி விட்ட ரஜினி இரண்டாம் பாதியில் செம சர்ப்ரைஸ் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி தீர்க்கின்றனர். மேலும் முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போதே படம் பற்றிய சில நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவி வந்தது.

jailer-mass-reviews
jailer-mass-reviews

இருப்பினும் தற்போது படத்தை பார்த்து முடித்தவர்களின் கருத்துக்கள் இப்போது அதை மாற்றி இருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் இந்த ஜெயிலர் அவருக்கான கம்பேக் மட்டுமல்லாமல் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆகவும் அமைந்திருக்கிறது.

Also Read: அட்டர் ஃப்ளாப்பால் மோசம் போன அக்கட தேசத்து நடிகர்.. அஜித், சூர்யா பட இயக்குனர் காட்டிய பந்தா!

Trending News