சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இவரைப் பார்த்தாலே ரஜினி, கமல் நடுங்குவாங்க.. வெளுத்து விடுவார் என்ற பிரபலம்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே இந்த குறிப்பிட்ட இயக்குனரை பார்த்தாலே அஞ்சி நடுங்குவார்கள் என பிரபலம் ஒருவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி, கமல் ஆகிய இருவருமே சினிமாவில் கோலோச்சியவர்கள். ஒருவருக்கொருவர் தனிப்பாதை அமைத்துக் கொண்டு தங்களுடைய சினிமா வாழ்க்கையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் இருவரும் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகின்றனர்.

சினிமாவில் சிறப்பாக செயல்பட்ட இருவரும் அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். ரஜினிக்கு முன்பே கமல் தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து தற்போது நிர்வகித்து வருகிறார். ரஜினி இடையில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லிவிட்டு பின்னர் அதிலிருந்து பின்வாங்கி விட்டார்.

மேலும் கமல் கட்சிக்கு ரஜினி ஆதரவு தருவாரா? என்பது தான் தற்போது அனைவரது கேள்வியாக உள்ளது. ஆனால் அதற்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள் ரஜினி வட்டாரங்கள். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் பிரபலம் ஒருவர் கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளராகவும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி கமல் அரசியலுக்கு வருவதை இயக்குனர் மணிவண்ணன் பார்த்திருந்தால் வெளுத்து வாங்கியிருப்பார் என குறிப்பிட்டுள்ளார். அரசியலில் மணிவண்ணனுக்கு தெரிந்த அளவுக்கு யாருக்குமே எதுவும் தெரியாது எனவும், இப்போது மட்டும் மணிவண்ணன் உயிரோடு இருந்திருந்தால் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும் அரசியல் என்ற கனவே வராத அளவுக்கு பகிரங்கமாக மிரட்டி தள்ளி இருப்பார் என கூறியுள்ளார்.

manivannan-cinemapettai
manivannan-cinemapettai

மேலும் அப்போதே மணிவண்ணன் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் அரசியல் குறித்தும் விமர்சித்தாராம். அதுமட்டுமல்லாமல் ஒரு பேட்டியில், கமல் உனக்கு ஹாலிவுட்ல போய் செட்டிலாகனும், இதுதான உன்னோட பிளான், உன்ன பத்தி எல்லாம் தெரியும் என ஓபனாகவே பேசி உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

Trending News