கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடிக்கின்றார். கிட்டத்தட்ட கமலுக்கு இணையான ரோலில் சிம்பு நடிப்பதாக தெரிகின்றது.
மறுபக்கம் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், லுக் எல்லாம் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. கமலின் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் தக்லைப் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தயாராகி வருகின்றார் கமல்.
தற்போது தக் லைப் படத்தை நம்பி தான் கமல் இருக்கும் நிலையில், படத்தில் கமல் மற்றும் சிம்பு காம்போ, மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர் ரஹ்மானின் இசை என பல ஹைலைட்டான விஷயங்கள் இப்படத்தில் இருப்பதால் கண்டிப்பாக தக்லைப் வசூல் வேட்டை நடத்தும் என தெரிகின்றது.
இந்த நிலையில், தக் லைப் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. அப்படி அடுத்த வருடம் ஜூன் 5-ஆம் தேதி தக் லைப் படம் வெளியாகிறது. கடைசியாக ரஜினி கமல் படம் ஒன்றாக வெளியானது என்றால் அது 2005-ல் தான். ஒரே நாளில், ரஜினிகாந்தின் சந்திரமுகி படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் வெளியானது.
மீண்டும் மோதும் ரஜினி கமல்
20 வருடம் கழித்து மீண்டும் இருவரும் தியேட்டர்களில் மோத போகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தக்லைப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதே நாளில் ரஜினியின் கூலி படமும் வெளியாகுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து அதற்க்கு அதிக வாய்ப்புள்ளதாகவே கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவுகிறது. அப்படி வெளியானால் அது 80ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தான் கொடுக்கும். தனது குருவுக்கு போட்டி போட்டு, லோகேஷ் பந்தயத்தில் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்