வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி, கமல் தயக்கமின்றி எல்லாத்தையும் பேசக்கூடிய ஒரே மனிதர்.. சகலகலா வல்லவனாக இருந்த பிரபலம்

கிட்டத்தட்ட 70 வயதை கடந்தும் நட்பாக பழகி வரும் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது ரஜினி, கமல் தான். ஒரு காலகட்டத்தில் இந்த இரு நடிகர்களின் படங்கள் போட்டியாக பார்க்கப்பட்டாலும் இவர்களுக்குள் எப்போதுமே சமூக நட்பு இருந்து வருகிறது.

இவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பொது வழியில் மற்றோர் செய்த தியாகத்தையும், உதவியையும் வெளிப்படையாக பேசிக் கொள்வார்கள். ஆனால் இப்போது உள்ள இளைய சமுதாயத்திடம் இந்த மாதிரியான நட்பை எதிர்பார்க்க முடியவில்லை.

Also Read : ரஜினியை முழுவதுமாக காப்பியடிக்கும் விஜய்.. எப்படியாச்சும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் நமக்கு வரணும் ஆசை.!

மேலும் வெகு நாட்கள் கழித்து பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினி, கமல் மீண்டும் இணைந்தார்கள். இந்நிலையில் ஒரு சமயத்தில் இந்த இரு நடிகர்களுக்குமே நெருங்க நட்பாக பழகி வந்தவர் பஞ்சு அருணாச்சலம். மற்றவர்களிடம் சொல்ல தயங்கும் எல்லா விஷயத்தையும் கமல் மற்றும் ரஜினி இருவருமே பஞ்சு அருணாச்சலம் இடம் பகிர்வார்களாம்.

பஞ்சு அருணாச்சலம் பொருத்தவளையில் ஒரு சகலகலா வல்லவன் என்று சொல்லலாம். ஏனென்றால் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் கவிஞர் கண்ணதாசன் இடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

Also Read : சண்டை இல்லை பஞ்ச் டயலாக் இல்லை.. ரஜினி மாஸ் காட்டாமல் நடித்த 5 படங்கள்

மேலும் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் பல வெற்றி படங்களில் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ளார். அவர் காமெடி கதையாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் அனைத்து திரைக்கதையிலுமே தனி முத்திரை பதித்துள்ளார். அந்த வகையில் ரஜினிக்கு புவனா ஒரு கேள்வி குறி, முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன் போன்ற எண்ணற்ற படங்களை கொடுத்துள்ளார்.

அதேபோல் உலக நாயகனுக்கும் சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், சிங்காரவேலன் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகளான கமல், ரஜினி இருவருக்குமே சரிக்கு சமமான நண்பர் என்றால் அது பஞ்சு அருணாச்சலம் தான். இந்த விஷயத்தை ரஜினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Also Read : யோசிக்க முடியாத கூட்டணி.. அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு தயாராகும் கமல், ராஜமௌலி

Trending News