மேடை நாடகத்துறையில் இருந்து திரையுலகில் நுழைந்த கே.பாலச்சந்தர் நீர்க்குமிழி என்னும் படம் மூலம் இயக்குனராக தனது முதல் படைப்பை கோலிவுட்டில் வெளியிட்டார். இப்படத்தை தொடர்ந்து அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கினார்.
பாலச்சந்தர் படம் என்றாலே எதார்த்தமும், சமூக பிரச்சனைகளும் மட்டுமே மைய கருத்தாக இருக்கும். அந்த வகையில் சத்தமில்லாமல் சில படங்களில் அரசியலும் பேசியுள்ளார் பாலச்சந்தர். இதுதவிர ரஜினி, கமல் போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவரையே சேரும்.
ரஜினியைவிட கமல் தான் பாலச்சந்தர் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். பாலச்சந்தர் மூலம் அறிமுகமானதாலோ என்னவோ ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அவரை தங்களின் குரு என்று கூறி வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களே பாலச்சந்தரை அவமதித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளதாம்.
ஆம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வளர்ந்த ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களுக்கென ஒரு இமேஜ் உள்ளது என கூறி பாலச்சந்தர் படங்களில் நடிக்க மறுத்து உள்ளனர். மேலும் வேண்டுமானால் எஸ்பி முத்துராம் இயக்கட்டும் அந்த படத்தை பாலச்சந்தர் தயாரிக்கட்டும் என கூறிவிட்டார்களாம்.
அதனால் தான் பாலச்சந்தர் எஸ்பி முத்துராம் படங்களுக்கு கதை எழுதாமல் தயாரிக்க மட்டும் செய்தாராம். பாலச்சந்தர் உச்சத்தில் இருந்த இயக்குனர் தான். ஆனால் தாங்கள் வளர்ந்து விட்டோம் தங்களுக்கென ஒரு இமேஜ் உள்ளது என கூறி பாலச்சந்தர் படங்களில் நடிக்க மறுத்த கமல் மற்றும் ரஜினியின் செயல் நியாயமற்றது.
என்னதான் இருந்து அவர்களை திரையில் அறிமுகப்படுத்திய ஒரு நபரை இப்படி அவமதித்திருக்க கூடாது. ஒருவேளை இவர்இயக்கத்தில் நடித்து படங்கள் தோல்வி அடைந்து இருந்தால் இவ்வளவு உச்சத்தை தொட்டு இருப்பார்கள் என்பது சந்தேகம்தான்.