Rajini-Kamal-Vijay-Ajith: நம்ம ஊரு பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் எது செய்தாலும் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கும் இவர்கள் சமுதாய பிரச்சனை என்றால் மட்டும் வாய் திறப்பது கிடையாது.
அதிலும் இப்போது மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவம் சோஷியல் மீடியாவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் கொந்தளிக்க வைத்த இந்த சம்பவத்திற்கு எதிராக தற்போது பலரும் தங்கள் ஆதங்கத்தையும், எதிர்ப்பு குரலையும் தெரிவித்து வருகின்றனர்.
Also read: ஹீரோக்களை நடிப்பில் மிரள செய்த மறைந்த 5 வில்லன்கள்.. விஜய்க்கு தண்ணி காட்டிய வேதநாயகம்
மத்திய அரசு ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருக்கிறது. கடந்த மே 4ம் தேதி மணிப்பூரில் இரு பழங்குடி பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றது மட்டுமின்றி அவர்களை பலவந்தப்படுத்திய காட்சியும் நேற்று சோசியல் மீடியாவில் வெளியானது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வெளியில் தெரியாமல் போன இந்த சம்பவம் தற்போது பலரின் கவனத்திற்கும் வந்துள்ளது. பதைபதைக்க வைத்த அந்த காட்சியை பார்த்த பலரும் இப்போது அரசுக்கு எதிராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற உரிமை குரல்களும் எழுந்துள்ளது.
Also read: கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி
இப்படி ஒட்டுமொத்த நாடும் இணைந்து குரல் கொடுத்து வரும் இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், சோனு சூட், கியாரா அத்வானி ஆகியோரும் சோசியல் மீடியாவில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நம் கோலிவுட் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் இதுவரை எந்த பதிவையும் போடவில்லை.
எப்போதுமே உலக நாயகன் இது போன்ற விஷயங்களுக்கு முன்வந்து குரல் கொடுப்பார். ஆனால் அவர் இன்று ப்ராஜெக்ட் கே விழாவில் பிசியாக இருப்பதால் இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். அதேபோன்று அரசியலில் கால் பதிக்க முயற்சி செய்து வரும் விஜய்யும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.
இது உண்மையில் ஏமாற்றமாக தான் இருக்கிறது. தங்களுடைய பட ப்ரமோஷன் என்றால் உடனே ஓடி வந்து விளம்பரம் செய்யும் நடிகர்கள் இது போன்ற விஷயங்களில் அமைதியாக இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் இவர்களைத்தான் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறோம்.