புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஜய் சேதுபதி பண்ண மாதிரி உச்சம் தொட்ட ரஜினி, கமல், விஜய் கூட பண்ணதில்லை.. வெளுத்து வாங்கிய பிரபலம்

சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக் காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன்பின், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தன், சேதுபதி, 96 உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன்பின், மாதவனுடன் வேதா படத்தில் எதிர்மறை கேரக்டரில் நடித்தார். அதேபோல்,விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். அப்படத்தில் வில்லனாக நடித்தது பலரது பாராட்டுகளை பெற்றது. அடுத்து, கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியிலும் நடித்து வருகிறார். கடைசியாக அவர் கரீனா கபூருடன் இணைந்து மெரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி ரசிகர்களை அழைக்கும் விதம் சரியில்லை – பிரபலம்

இந்த நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்களை மதிப்பேதேயில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற ரசிகர்களே தங்கள் ரசிகர்களை நீ, டே, போடா என்று ஒருமையில் அழைப்பதில்லை. ஏனென்றால் ரசிகர்களால்தான் இந்த உயரத்தை அடைந்தோம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், விஜய் சேதுபதி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், ரசிகர்களை அவர் பேசுவது மாதிரி எந்த நடிகரும் பண்ணியதில்லை.

இடைமறித்த தொகுப்பாளர், அவருடைய ஆள், ரசிகர் என்பதால் இப்படி விஜய் சேதுபதி பேசுகிறாரா? எனக் கேட்டார். அதற்கு அவர், அவர்கள் திருப்பி கேட்டார் இவர் என்ன செய்வார்? மிகப்பெரிய உச்சம் தொட்ட எந்த நடிகரும் இப்படி ரசிகர்களை மதித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதம், பிக்பாஸில் போட்டியாளர்களை பேசவிடாமல் பேசுவது உள்ளிட்டவற்றால் சர்ச்சை உருவாகிய நிலையில், அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கூட கமல்தான் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. விஜய்சேதுபதி ரசிகர்களை கையாளும் விதம் குறித்து நெட்டிச்ன்களும் கருத்துகள் கூறி, தாங்கள் வந்த பாதையை யாரும் மறக்கக் கூடாது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News