வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2ம் திருமணத்திற்கு அடி போட்ட ஐஸ்வர்யா.. என்னடா வாழ்க்கை இது என மாலத்தீவு கிளம்பிய ரஜினி

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது மாலத்தீவு சென்றுள்ள புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாக ரஜினி சந்தோஷமாக இருந்தால் இமயமலைக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இப்போது ஐஸ்வர்யாவின் மீது உள்ள கோபத்தின் காரணமாக தனியாக மாலத்தீவு சென்றுள்ளாராம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் சிங்கள் காவாலா பாடல் அண்மையில் வெளியானது.

Also Read : மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

இதுவரை எந்த நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு காவாலா பாடல் அதிக பார்வையாளர்களை தாண்டி யூடியூப்பில் ட்ரெண்டானது. இதை கொண்டாடும் விதமாகத்தான் மாலத்தீவிற்கு ரஜினி சென்று இருக்கிறார். ஆனால் எப்போதுமே ஐஸ்வர்யா உடன் செல்லும் ரஜினி இப்போது தனிமையில் செல்ல ஒரு காரணம் இருக்கிறது.

அதாவது தனுஷை பிரிந்து தனிமையில் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினியிடம் நான் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் உச்சகட்ட கடுப்பான ரஜினி ஐஸ்வர்யாவிடம் சில அறிவுரை கூறியிருக்கிறார். தனுஷ் மனக்கசப்பு காரணமாகத்தான் உன்னை விட்டு பிரிந்து இருக்கிறார்.

Also Read : நெல்சனை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ரஜினி.. இந்த 3 படங்களையும் ஓரங்கட்டிய ஜெயிலர்

ஆனால் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். நாளடைவில் அந்த பாசம் உன்மேலும் நேசமாக மாறலாம். அதுவரை பொறுமையாக காத்திரு என்று ரஜினி கூறியுள்ளார். ஆனாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது ஐஸ்வர்யா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார்.

ஆகையால் மாலத்தீவு செல்லும்போது ஐஸ்வர்யா உடன் இருந்தால் மேலும் பிரச்சினை தான், இரண்டு நாட்கள் சந்தோஷமாக இருந்து விட்டு வரலாம் என்று ரஜினி தனியாக சென்று இருக்கிறார். அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் மீண்டும் சென்னை திரும்பி விடுவாராம். இந்த தகவல்களை எல்லாம் பயில்வான் ரங்கநாதன் யூடியூப்பில் கூறியிருக்கிறார்.

Also Read : ஹுக்கும் பாடலைக் கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய ரஜினி.. இவ்வளவு சர்ச்சை போயிட்டு இருக்கு இப்படி சொல்லிட்டாரே!

Trending News