புதன்கிழமை, மார்ச் 12, 2025

சம்பவம் பண்ண போகும் சூப்பர் ஸ்டார்.. 20 வருஷத்துக்கு முன்னாடி நோ சொன்ன விஷயத்துக்கு இப்போ ஓகே சொல்லிட்டாராமே!

Rajinikanth: 20 வருஷத்துக்கு முன்னாடி நோ சொன்ன ஒரு விஷயத்துக்கு இப்போ ரஜினி பச்சை கொடி காட்டி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

இந்த வயதிலும் கோலிவுட் மார்க்கெட்டை தன் சுண்டு விரலில் சுழல விட்டுக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை அதிரடியாக வெளியிட்டார்.

கூலி படம் படப்பிடிப்பு முடிந்த பிறகு 15 நாட்கள் ஜெயிலர் 2 படத்திற்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். அதன் பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு படப்பிடிப்பிலும் ரஜினி கலந்து கொள்ளப் போவதில்லை.

சம்பவம் பண்ண போகும் சூப்பர் ஸ்டார்

தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் ஓய்வெடுக்கப் போகிறார் என்று தான் நாம் எல்லோரும் நினைப்போம். ஆனால் ரஜினி மற்றொரு விஷயத்தில் களமிறங்க இருக்கிறார்.

20 வருடத்திற்கு முன்பு ரஜினியிடம் அவருடைய சுயசரிதை பற்றி எழுத கேட்கப்பட்டது. சுயசரிதை என்றால் எல்லாமே உண்மையைத் தான் எழுத வேண்டும். அப்படி என்னால் எழுத முடியாது என்று மறுத்திருக்கிறார் ரஜினி.

ஆனால் தற்போது தன்னுடைய சுயசரிதை எழுதும் முயற்சியை தொடங்க இருக்கிறார். இதற்காகத்தான் இந்த மூன்று மாதங்கள் அவர் நேரம் எடுத்திருப்பது.

பல முக்கிய நட்சத்திரங்கள், மற்றும் தலைவர்கள் தற்போது இல்லை என்ற சூழ்நிலையில் ஒரு வேளை இதுதான் தன்னுடைய சுயசரிதையை எழுத சரியான நேரம் என ரஜினி முடிவெடுத்திருக்கலாம்.

Trending News