ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஹிட் இயக்குனருக்கு வலை விரிக்கும் ரஜினி.. கண்டிஷன் கேட்டு தெறித்து ஓடிய யுனிவர்ஸ் இயக்குனர்

ரஜினிக்கு சமீபத்தில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. அதனால் அடுத்த கட்டமாக ஜெயிலர் படத்தில் மிகவும் கவனமாக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து நடித்து வருகிறார். மேலும் இவரின் சக நண்பரான கமல், கடந்தாண்டு பெரிய வெற்றி படத்தை கொடுத்த நிலையில் இவருக்கும் அதே மாதிரி இப்பொழுது பெரிய ஆசை வந்திருக்கிறது.

அதனால் இப்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனருக்கு வலை விரித்து இருக்கிறார். அதற்காக யுனிவர்ஸ் இயக்குனரான லோகேஷிடம் ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார். பின்பு அவர்கள் சந்தித்தபோது லோகேஷிடம் தனக்கு ஒரு படத்தை பண்ணுமாறு வற்புறுத்தி இருக்கிறார். மேலும் அதில் ஒரு கண்டிஷனையும் போட்டு வைத்திருக்கிறார்.

Also read: ரஜினி போல் ஆக்டிவாக மாறிய பழைய ஹீரோ.. சும்மா பம்பரம் போல் சுற்றி 10 படங்களில் நடிக்கும் ஸ்டார்

இதனை கேட்டதும் லோகேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி இருக்கிறார். பின்னர் லியோ படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 என வரிசையில் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அந்தப் படங்களை சூட்டோடு சூட்டாக முடித்தால் தான் வெற்றி கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதே மாதிரி அந்த படத்திற்கான தயாரிப்பாளர்களிடம் வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனை கேட்ட ரஜினி, கமல் படத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அது சம்பந்தமாக கமலிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். ஏனென்றால் ரஜினிக்கும், கமலுக்கும் பெரிய அளவில் ஒத்துப்போகும் அத்துடன் இவர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வருவதால் நம்பிக்கையோடு லோகேஷிடம் கூறியிருக்கிறார்.

Also read: லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை

அது மட்டுமில்லாமல் விக்ரம் படத்தைப் போல நானும் ஒரு பெரிய வெற்றி படத்தை அடைய வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லி இருக்கிறார். அத்துடன் நான் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்றும் கூறுகிறார். ரஜினி இப்படி கூறியதன் மூலம் லோகேஷ்க்கு பெரிய செக் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையெல்லாம் தாண்டி கமல், ரஜினிக்காக ஒத்துக் கொண்டாலும் லோகேஷின் அடுத்த படத்திற்கான தயாரிப்பாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இதற்கான முடிவுகளை பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார். திடீரென்று இப்பொழுது ரஜினி, லோகேஷிடம் படத்திற்காக இப்படி கெஞ்சுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

Also read: ரஜினியின் பெயரை டேமேஜ் செய்யும் குடும்பம்.. நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Trending News