வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மடுவை பார்த்து பயந்த அண்ணாமலை.. பக்குவத்தை இழந்து சிறுபிள்ளைத்தனமாக பதிலடி கொடுத்த ரஜினி

Actor Rajini: இன்று முழுவதுமே சோசியல் மீடியா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கும் நிலையில் தற்போது இப்படம் பல விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. அதிலும் ரஜினி இப்படி செய்யலாமா என்ற கேள்வி தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த அமளி துமளிக்கு முக்கிய காரணம் நேற்று வெளியான இப்படத்தின் இரண்டாம் பாடல் தான். ஏற்கனவே முதல் பாடல் ட்ரெண்டான நிலையில் நேற்று வெளியான ஹுக்கும் பாடலின் வரிகள் தான் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

Also read: இந்த ரஜினி பாட்டு உங்களுக்காக எழுதியது தான் தளபதி.. சரமாரியாக வறுத்தெடுத்த பயில்வான்

அதாவது சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க விஜய் உட்பட பல நடிகர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் போட்டி போட்டு வருகின்றனர். அதிலும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில பிரபலங்களே கூறி வந்த நிலையில் ரஜினி அமைதியாகவே அதை கவனித்து வந்தார்.

ஆனால் தற்போது வெளியான அந்த பாடலின் மூலம் அவர் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று பதிலடி கொடுத்திருப்பது நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒன்று தான். ஏனென்றால் அனுபவத்திலும், பக்குவத்திலும் மலை போன்ற உயரத்தில் இருக்கும் அவர் மடுவை பார்த்து தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Also read: நெல்சன் மிரட்டும் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ரஜினியை தூக்கி விடும் பான் இந்தியா ஹீரோக்கள்

அப்படி இருக்கும் நிலையில் அந்தப் பாடல் வரிகள் முழுவதுமே விஜய்க்கு பதிலடி கொடுக்கும் படியாக தான் இருந்தது. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும் என்று ரஜினி பாடியிருந்தார். ஆனால் இப்போது அவரே நான் தான் சூப்பர் ஸ்டார் என்று ஏலம் போடும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இதுதான் இப்போது ஆச்சர்யமான விவாதமாக மாறி இருக்கிறது. மேலும் இந்த பாடல் வரிகளை ரஜினி எதற்காக அனுமதித்தார் என்ற கேள்வியும் எழுகிறது. அந்த வகையில் அவர் தன் சூப்பர் ஸ்டார் பட்டம் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இருக்கிறாரா அல்லது பக்குவத்தை இழந்து விட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரிடமிருந்து இதை நிச்சயம் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

Also read: சிவாஜி, சரோஜா தேவியும் கோடியில் சம்பளம் வாங்கிய ஒரே படம்.. அதிகபட்ச சம்பளம் வாங்கி கொடுத்த ரஜினி

Trending News