Actor Rajini: ஒரு மலையாள படம் இந்த அளவுக்கு தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவது பெரும் சாதனை தான். சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் இந்த புகழை தட்டி சென்றுள்ளது.
அதனாலேயே நம்ம ஊரு டாப் ஹீரோக்கள் பட குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள். அதிலும் இப்படத்தின் வெற்றிக்கு விதை போட்ட உலகநாயகன் உடன் நடந்த சந்திப்பு தான் வைரலானது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மஞ்சுமல் பாய்ஸ் டீமை நேரில் சந்தித்துள்ளார். இது நிச்சயம் அவர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான்.
ரஜினிக்கு லோகேஷ் தரும் சர்ப்ரைஸ்
இவ்வளவு பிசியான வேலையிலும் ரஜினி அவர்களை சந்தித்துள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் தலைவர் 171 அப்டேட்டும் குதூகலப்படுத்தியுள்ளது.
அதன்படி ஏற்கனவே லோகேஷ் இப்படம் ஒரு தனித்துவமான கதையாக இருக்கும் என கூறியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது இது 100% அவருக்கான படமாக மட்டும் தான் இருக்குமாம்.
மஞ்சுமல் பாய்ஸ் டீமை சந்தித்த சூப்பர் ஸ்டார்
இன்னும் சொல்லப்போனால் இப்படம் ரஜினிக்கு மிகப்பெரும் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு கதை பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் சூப்பர் ஸ்டாரின் புது அவதாரத்தையும் நாம் இப்படத்தில் காணலாம். இதை லோகேஷ் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மஞ்சுமல் பாய்ஸ்
அதேபோல் அன்பறிவு மாஸ்டர்கள் தான் சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளனர். இப்படி பல விஷயங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.