சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
மேலும் முதல் முறையாக ரஜினிக்கு டி இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக விரைவில் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாம்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்காமல் பலமுறை தள்ளிச் சென்று தற்போது தான் ஒரு வழியாக மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அண்ணாத்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் நடந்த போது ரஜினிகாந்த் தன்னுடைய பழைய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை சந்தித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான விஷ்ணு மஞ்சு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேங்ஸ்டர்ஸ் என குறிப்பிட்டுள்ளார். மோகன் பாபுவும் ரஜினியும் சினிமாவில் படவாய்ப்புகள் தேடும் காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள்.
ரஜினி தமிழிலும் மோகன்பாபு தெலுங்கிலும் பின்னாளில் பெரிய நடிகர்களாக வலம் வந்தனர். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மோகன் பாபு சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திலும் மேஜர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
![rajini-mohanbabu-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/rajini-mohanbabu-cinemapettai.jpg)