வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மன அழுத்தத்தால் திருமணமானதை மறந்த நடிகை.. தனக்கே தண்டனை கொடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை

அன்று முதல் இன்று வரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆக ரவுண்டு கட்டி கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடன் இணைந்து  நடிக்க நடிகைகள் நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். அப்படி ரஜினியுடன் நடித்த நடிகை ஒருவர் மன அழுத்தத்தால் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கரகாட்டக்காரன் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை கனகா அதன்பிறகு ரஜினி, பிரபு, கார்த்திக், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதிலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகையான கனகாவிற்கு அவருடன் அதிசயப் பிறவி என்ற படத்தில் இணைந்து நடிப்பதற்கான  வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர்களது காம்போ அல்டிமேட் ஆக இருந்தது மட்டுமின்றி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

Also Read: ரஜினி, விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா.. பணத்தாசையால் ஷாரூக்கானிடம் சரண்டர்!

தற்போது 49 வயதான கனகா, சென்னையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கனகாவின் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் சோகங்களால் நிறைந்தது. ஏனென்றால் கனகாவின் அம்மா நடிகை தேவிகாவின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மன அழுத்தத்தில் வீட்டிலேயே முடங்கி விட்டார்.

அது மட்டுமல்ல தனக்கு திருமணம் நடந்ததா நடக்கவில்லையா என்பது கூட அவருக்கு தெரியவில்லை. பேட்டி ஒன்றில் தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் பெயர் புருஷோத்தமன். அவர் நியூயார்க்கில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் கனகாவின் பேச்சை நம்பவில்லை. கணவனின் புகைப்படத்தை கேட்டபோது அதை காட்ட  மறுத்துவிட்டார். இதனால் பத்திரிக்கையாளர்கள் கனகா பொய் சொல்கிறார் என்றும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என சொல்கின்றனர்.

Also Read: எப்படிறா! சினிமாவில் காட்டாமலேயே புகழடைந்த 5 கேரக்டர்கள்.. யாரு தான் சாமி அந்த சொப்பன சுந்தரி

தற்போது கனகாவின் மனநிலை ரொம்பவே அழுத்தப்பட்டு இருக்கிறது. ஆகையால் அவர் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் தேவிகாவால் சினிமா வாய்ப்பை பெற்ற நடிகர் ஒருவரின் மகன் ராமச்சந்திரன் கனகாவிற்கு பிஏவாக இருந்து, அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை ஒருதலையாக காதலித்திருக்கிறார்.

அவர்தான் கொஞ்சம் கொஞ்சமாக கனகாவை மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்திருக்கிறார். ஆனால் ராமச்சந்திரனுக்கு கனகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பது தெரிந்ததும், அவரை தவறாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்த பிறகுதான் கனகாவிற்கு அவர் தன்னை காதலித்தது தெரிந்துள்ளது. இதனால் மீண்டும் மனம் உடைந்து  போய் சினிமாவை விட்டு விலகினார்.

Also Read: இளம் வயதில் தமிழில் ஷகிலா கலக்கிய 4 படங்கள்.. வயதுக்கு வராமல் கவுண்டமணியை பரிதவிக்க விட்ட கவர்ச்சி புயல்

தன் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருத்தரையும் வரிசையாக
இழந்ததால் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு வீட்டில் சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவரது வீடு தீ பற்றி எரிந்த போது கூட தீயணைப்பு வீரர்களை கூட உள்ளே வரவிடவில்லை. அந்த அளவிற்கு அவருடைய மனம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கனகா ராமச்சந்திரனை திருமணம் செய்திருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என திரை பிரபலங்கள்  பரிதாபப்படுகின்றனர்.

Trending News