வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அழகை காப்பாற்றிக் கொள்ள ஊசி, கருக்கலைப்பு, கள்ளக்காதல்.. ரஜினி மருமகளின் மறுமுகம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஒருவரின் சுயரூபம் தற்போது வெளிவந்து பலருக்கும் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது அழகை காப்பாற்றிக் கொள்வதற்காக ஊசி, கருக்கலைப்பு என இந்த நடிகையை பற்றிய விஷயம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்த மிர்ணா தான். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தில் பலராலும் கவனிக்கப்பட்ட பிரபலம் தான் இவர். சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் இப்படி ஒரு அழகான மருமகளா என ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Also read: சிவாஜி விழாவில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

அந்த வகையில் பட்டதாரி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதிதி மேனன் என்ற பெயரில் தான் நடித்தார். முதல் படத்திலேயே அதில் ஹீரோவாக நடித்திருந்த அபி சரவணன் மீது இவருக்கு கண்டதும் காதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஜோடி லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தனர்.

சிறிது காலத்திலேயே இவர்கள் முறைப்படி திருமணமும் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் தான் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது அபி சரவணன் வெளியூருக்கு ஷூட்டிங் சென்றபோது மிர்ணா, வீட்டிலிருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு கள்ள காதலனுடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.

Also read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

அதைத்தொடர்ந்து அவரை காணவில்லை என அபி சரவணன் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். பிறகு தான் அவர் முன்னணி நடிகர் ஒருவருடைய மேனேஜருடன் உறவில் இருந்திருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மாறி மாறி புகார் அளித்தனர்.

ஆனால் தன் மனைவி தன் இளமையை காப்பாற்றிக் கொள்ளவும், அழகாக இருப்பதற்கும் சில ஊசிகளை போட்டுக் கொண்டார் எனவும் அதனால் நான்கு முறை கரு கலைப்பு செய்தார் எனவும் அபி சரவணன் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மிர்ணா தன் கணவர் தன்னை மிரட்டுகிறார் என்று பதில் புகார் அளித்தார்.

Also read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

இப்படி மாறி மாறி சண்டை போட்டு பரபரப்பை கிளப்பிய இந்த ஜோடியின் விவாகரத்து வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் பட நடிகையின் இந்த மறுமுகம் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Trending News