வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

ரஜினி பட வாய்ப்பை தவற விட்ட நடிகை.. இப்போ கதறி என்ன பிரயோஜனம்.!

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் அறிமுகமான கிரண், தொடர்ந்து அஜித் நடித்த வில்லன், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் சகுனி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் தெரிவித்துள்ளார்.

அதில், ”கடந்த ஆறு மணி நேரமாக பாபா படத்தின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்ட காரணமாகக் கூட இருக்கலாம்.

அந்த சமயத்தில் நான் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும் நடனத்திலும் அவரை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்” என கூறியுள்ளார்.

kiran- rathod

Trending News