Rajini Movie Heroine: 80களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் முக்கால்வாசி காதல் படமாக தான் இருக்கும். அதாவது ஹீரோயினை உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரத்தில் ரஜினி அனைவரிடமும் கைத்தட்டலை பெற்றுவிடுவார். அந்த அளவிற்கு அவருடைய படத்தில் ஹீரோயின் கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். அப்படி வந்த ஹீரோயின்களில் ரஜினிக்கு மிகவும் ஃபேவரட்டான ஹீரோயின் நடிகை மாதவி.
இவர் ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு மற்றும் அதிசய பிறவி படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் கமலுடனும் டிக் டிக் டிக், காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக பெயர் பெற்றார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக 300 படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அந்த காலத்தில் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஹீரோயின் ஆகவும், கண்ணழகியாக அனைவரையும் சொக்க வைத்திருக்கிறார். இவர் கடைசியாக 1996 ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர், மருந்து நிறுவனத்தை வைத்திருக்கும் ரால்ப் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு போய்விட்டார். தற்போது மூன்று அழகான பெண் குழந்தைகளுடன் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருகிறார்.
Also read: ரஜினியை பற்றி பேசி கேரியரை கெடுத்து கொண்ட பிரபலம்.. வடிவேலு போல் சுற்றி அடிக்கும் கர்மா
அவ்வப்போது இணையத்தில் இவர்களுடைய குடும்ப போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்க்கும் பொழுது 80ஸ் ஹீரோயின் மாதவியா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அத்துடன் இவருடன் பிரிட்டிஷ் இளவரசி போல் மூன்று பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் கணவருடனும் மூத்த பிள்ளை பிரிசில்லா உடன் இருக்கும் புகைப்படத்தில் மாதவி பாப் கட்டிங் வைத்து பாரின் லேடி மாறி லுக் கொடுத்து அசத்தியிருக்கிறார். மேலும் இளம் வயதில் இருந்த ஜாடை கொஞ்சம் கூட தற்போது இல்லாத அளவிற்கு யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு ரொம்பவே தோற்றத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறார்.
நடிகை மாதவி, கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம்
Also read: விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்