கிறிஸ்மஸ், நியூ இயர் என வெளிநாட்டில் குடும்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு மீண்டும் Netflix கல்யாண CD-யால் ஏழரை ஆரம்பித்துள்ளது.
தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை உபயோகப்படுத்தியதால் தனுஷ் தயாரிப்பு தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியது, அதற்கு நயன்தாரா பதிலடி கொடுத்தார்.
கல்யாண வீடியோவில் போய் இப்படி செய்யலாமா தனுஷ் என கேள்வி ஒரு புறம் இருந்தாலும், கல்யாண CD-யை Netflix-டம் விற்று வியாபாரம் செய்தது நியாயமா? என மறுபுறம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சந்திரமுகி பட காட்சிகளை நயன்தாரா உபயோகப்படுத்தியதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.
பிரபுவின் சிவாஜி ப்ரொடக்ஷன் தான் இந்த படத்தை தயாரித்தது. 5 கோடி வரை இழப்பீடு கேட்டுள்ளனர், நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்னதாக ரஜினியிடம் இந்த சம்பவம் சென்றதா என்று தெரியவில்லை.
ஒருவேளை தனுஷை பலி வாங்கியதால் ரஜினி எடுத்த முடிவா என்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ ரஜினி இது போன்ற கீழ்த்தரமான எண்ணங்களை கொண்டவர் அல்ல.
அதனால் அந்த தயாரிப்பு நிறுவனமே முடிவு எடுத்திருக்கலாம். தற்போது அனுப்பி உள்ள இந்த நோட்டீசுக்கு நயன்தாரா என்ன பதிலளிக்க போகிறார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.