ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என்கவுண்டர் பண்ணும் எமன், கெட்டப்பையன் சாருடா.. சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் பிரிவ்யூ எப்படி இருக்கு.?

Vettaiyan Prevue: ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என்ற இரு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து இருப்பதாலேயே வேட்டையன் வழக்கத்திற்கும் மாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாஸில் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அனிருத்தின் பெர்ஃபார்மன்ஸ் சூப்பர் ஸ்டாரின் பேச்சு மட்டுமல்லாமல் மனசிலாயோ பாடலுக்கு அவர் போட்ட ஆட்டமும் வேற லெவலில் இருந்தது.

தலைவர் ஆடுவார் என்பதை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இதனால் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அதுதான் இப்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. அதேபோல் வேட்டையன் பிரிவ்யூ வீடியோவும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் இரு சூப்பர் ஸ்டார்களும் எதிரும் புதிருமாக இருக்கும் அந்த காட்சி புல்லரிக்க வைத்துள்ளது. ஆபத்தான வில்லன்களுக்கு எமனாக வரும் சூப்பர் ஸ்டார் என்கவுண்டர் செய்வதில் கில்லாடி அதனாலயே அவர் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

எதிரும் புதிருமாக நிற்கும் ரஜினி அமிதாப்

அதேபோல் என்கவுண்டர் என்பது தண்டனை கிடையாது முன்னெச்சரிக்கை என்பது அவருடைய மனப்பான்மை. ஆனால் என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்வது ஹீரோயிசமா என்ற மனப்பான்மையுடன் இருக்கிறார் அமிதாப் பச்சன்.

இதற்கு இடையில் ரவுடிகளை தேடித்தேடி வேட்டையாடும் ரஜினி, தெறிக்கும் தோட்டாக்கள் என வீடியோ முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதிலும் பின்னணியில் அனிருத் குரலில் சூப்பர் ஸ்டாருடா கெட்ட பையன் சாருடா ரசிக்காதவன் யாருடா என்ற பாடலும் அத்தனை பொருத்தம்.

இப்படியாக வெளிவந்துள்ள இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் தயாரிப்பு தரப்பு அடுத்ததாக மாஸ் ட்ரெய்லர் ஒன்றை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர்.

வசூல் வேட்டையாட தயாராகும் வேட்டையன்

Trending News