வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சண்டை இல்லை பஞ்ச் டயலாக் இல்லை.. ரஜினி மாஸ் காட்டாமல் நடித்த 5 படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவரது திரைப்படங்களில் ஆக்ஷன், ஸ்டைல், டயலாக்குகள் என எதற்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அவர் மாஸ் காட்டாமலேயே ஒரு சில திரைப்படங்களில் அமைதியாகவும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போலவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி படங்களை ஹிட்டும் ஆக்கியுள்ளார். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாஸ் காட்டாமல் நடித்த 5 சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்

ஆறிலிருந்து அறுபது வரை : 1979ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த் தனது சிறு வயது முதல் வாலிப வயது வரை தனது குடும்பத்தை வழிநடத்த பல கடன்களுக்கு உள்ளாகி, வேலையை இழந்து கடைசியில் ஒரு புத்தகம் எழுதி அதன் மூலமாக பணக்காரராகி விடுவார். 60 வயதில் தனக்கு கிடைத்த பணத்தை நினைக்காமல், தான் பட்ட கஷ்டத்தையும் நன்றி மறந்த மனிதர்களையும் நினைத்து ஒரு நாற்காலியில் அமர்ந்து அப்படியே இறந்துவிடுவார். இத்திரைப்படம் சென்னையில் இருந்த மிட்நைட் திரையரங்கில், 25 வாரங்கள் ஓடியது. இதுதான் ரஜினிகாந்த் நடித்ததிலேயே அதிகம் திரையரங்கில் ஓடப்பட்ட திரைப்படமாகும்.

Also Read : விநியோகஸ்தர்கள் தலையில் துண்டை போட்ட 5 படங்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கு இந்த நிலைமையா?

முள்ளும் மலரும் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களிலேயே சிறந்த திரைப்படம் என்று சொல்லுமளவிற்கு இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது. கஷ்டப்படும் வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதர்களைப் போல் ரஜினிகாந்த் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 1978 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஸ்டாருக்கு சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு ஸ்டேட் விருது பிலிம்பேர் விருது என பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது.

ராகவேந்திரா : 1985ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான ராகவேந்திரா திரைப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி, மோகன், அம்பிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த் ராகவேந்திர சுவாமி ஆக நடித்த நிலையில், அவருக்கு இத்திரைப்படம் தோல்வியை கொடுத்தது. ரஜினிகாந்த் சாந்தமான துறவி போல இத்திரைப்படத்தில் காட்சிபடுத்தப்பட்டதால் அவரது நடிப்பு செயற்கையாக இருந்தது என பல விமர்சனங்களை பெற்றார்.

Also Read : ரஜினிகாந்த் கால்சீட்டையே அலசி ஆராயும் தயாரிப்பாளர்.. பிரதீப் ரங்கநாதனை விரட்டி விட்ட பரிதாபம்

கை கொடுக்கும் கை : இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கை கொடுக்கும் கை திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிய வெற்றித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கண் தெரியாத தனது மனைவியான ரேவதியை அந்த ஊரிலுள்ள பண்ணையார் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், இதனை அறிந்த ரஜினிகாந்த் எப்படி பண்ணையாரை பழிவாங்குகிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதையாக அமைந்தது.

உருவங்கள் மாறலாம் : 1984ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் ஹீரோவாக நடித்த உருவங்கள் மாறலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் கடவுள் போல சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பர். இதில் ரஜினிகாந்த் முதன்முறையாக ராகவேந்திர கடவுளாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் பேசப்பட்ட நிலையில், 1985 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தை ரஜினிகாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

Trending News