அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கும் படத்திற்காக இயக்குனர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கிறார். அதற்கு முன் அமெரிக்காவில் சிறிது ஓய்வு எடுக்க உள்ளாராம்.
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தம் முடிவடைந்து விட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் சென்னை வர உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படியே அமெரிக்கா செல்ல உள்ளாராம்.
அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ள ரஜினிகாந்த் அதன் பிறகு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். அந்தப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படத்தை பிரத்தியேகமாக கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டியுள்ளார். படத்தை பார்த்த ரஜினிகாந்த் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம்.
பேட்ட படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என கூறியிருந்த ரஜினிகாந்த் இந்த முறை கண்டிப்பாக என்னுடைய அடுத்த படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜூக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரஜினி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதை நினைத்து சிவகார்த்திகேயன் செம குஷியில் உள்ளாராம். அதற்கு காரணமும் இருக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த பிறகு உடனடியாக தேசிங்கு பெரியசாமிக்கு அட்வான்ஸ் கொடுத்து அடுத்த படத்துக்கு ஓகே செய்து விட்டார்.
இதற்கிடையில் ரஜினி படம் வந்தால் தன்னுடைய படத்தை கைவிட்டு விடுவாரோ என கவலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த செய்தி செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற கொண்டாட்டத்தை கொடுத்துள்ளதாம்.
