சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மற்றும் விலகியது குறித்து பேசுவதே பல கட்சிகளுக்கு சில தினங்களாக விவாதப் பொருளாக மாறிவிட்டது. சமிபத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டேன் என்று ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இதனால் பல கோடி ரசிகர்கள் மனதில் தேக்கி வைத்திருந்த ஆதங்கம் வெளிவந்தது. ஹைதராபாத் படப்பிடிப்புக்கு சென்ற ரஜினிகாந்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் பின்புலம் இருக்கலாம் என்று மக்கள் மனதில் அதிக கேள்விகள் முன் வைக்கப்பட்டது. பல வருடங்களாக ரஜினிகாந்தை அரசியலை விட்டு சென்று விடு, உனக்கு அது வராது என்று நெருங்கிய நண்பரான சிரஞ்சீவி கூறி வந்துள்ளாராம்.
அதாவது ரஜினி மற்றும் சிரஞ்சீவி நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்லாமல் நடிப்பு கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கி படிக்கும்போது படப்பிடிப்புக்கு நடந்தே சென்று வடபழனி ஸ்டுடியோ வரை சென்று வருவார்களாம்.
நாற்பத்தி ஐந்து வருடம் கழித்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக புகழ் பெற்றார். தமிழ் சினிமாவில் கூட சிரஞ்சீவிக்கு இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்துள்ளார் ரஜினி. 50 வருடத்திற்கு மேல் நெருங்கிய நண்பர் என்பதால் சமீபத்தில் ரஜினியின் மனதை அதாவது அரசியல் ஆசையை மாற்றியவர் சிரஞ்சீவி தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்திடம் சிரஞ்சீவி கூறுகையில் நானும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் தெரியாமல் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டேன் 25 எம்எல்ஏ தான் ஜெயிச்சாங்க, அப்புறம் காங்கிரசுக்கு போய்விட்டேன். அரசியலை வெறுத்துப் போனேன் இப்படி தனது அரசியல் அனுபவங்களை சூப்பர் ஸ்டாரிடம் பகிர்ந்தது மட்டும் இல்லாமல் தயவு செய்து அரசியலுக்கு வராதே என்று கூறிவிட்டாராம்.
ரஜினி அரசியலை விட்டு ஒதுங்கியதுக்கு சிரஞ்சீவியும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. சினிமாவைத் தாண்டி அரசியலில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது கடினம் இத்தனை வருடம் காப்பாற்றி வந்த பெயர் கெட்டுப் போய்விடும் என்பதற்காக கூட ரஜினிகாந்த் ஒதுங்கி விட்டாராம்.