வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னோட படத்துல நீதான் நடிக்கணும்.. அஜித்துக்கு கட்டளை போட்ட ரஜினி

அஜித் இந்த இடத்திற்கு வருவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து நிறைய தடைகளை தாண்டி வந்தவர். இவர் அறிமுகமான முதல் படம் அமராவதி, அதன்பின் அடுத்தடுத்த படங்களை எப்படி தேர்வு செய்யணும் என்று தெரியாமல் திணறியவர். ஏனென்றால் இவருக்கு திரை உலகத்தில் பின்னணி என்றும் யாரும் கிடையாது.

பின்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா செட் ஆகாது என்று நினைத்து அவருக்கு அதீத ஆசையாக இருந்த பைக் ரேஸில் போகலாம் என்று முடிவு செய்திருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு திருப்புமுனையாக வந்த படம் தான் ஆசை. ஆனால் இயக்குனர் ஆசை படத்திற்காக வந்து இவரை அழைத்த போது இவருக்கு பெரிதும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தார்.

Also read: துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

அப்பொழுது இயக்குனர், இந்த படத்திற்கு நீங்க தான் சரியா இருப்பீங்க இந்த படம் கண்டிப்பாக நமக்கு ஒரு வெற்றியை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கையை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அதே மாதிரி இந்த படம் வெற்றி அடைந்து பட்டி தொட்டி எல்லாம் பெயர் பெற்றார் அஜித். இவரை தேடி தொடர்ந்து இயக்குனர்கள் வந்த நிலையில், இவர் அதைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றவர்.

தொடர்ச்சியாக இவர் படங்கள் நடித்ததில் சில படங்கள் மட்டுமே வெற்றி அடைந்தது. ஒரு சில படங்கள் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது ஒரு விழாவில் அஜித்தும், ரஜினியும் சந்திக்க நேரிட்டது. அந்த சந்திப்பில் அஜித்திற்கு சில ஆலோசனைகளை வழங்கினார் ரஜினி. சினிமா துறையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வரும் நானும் இதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன்.

Also read: துணிவு பட ஒரிஜினல் மைபா இவர்தான்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

எந்த காலத்திலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலும் என்னுடைய படமான பில்லா படத்தை நீ எடுத்து நடிக்கணும் என்று கட்டளை போட்டு உள்ளார். அதைப் பின்பற்றிய அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா-வில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இந்த படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் ரஜினி, இவர் உடல்நிலை கருதி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக படத்தை வெளியிடுவது மட்டுமே உன்னுடைய குறிக்கோளாக எடுத்துக் கொள். எந்தவித நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளிலும் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். ரஜினி சொல்வதை இன்று வரை அஜித் கடைபிடித்து வருகிறார். ஏனென்றால் இதே பாணியை தான் ரஜினியும் 90-களில் பின்பற்றி வந்தாராம்.

Also read: ரஜினிக்கு வில்லனாக நடிக்க 2 கோடி சம்பளம் கேட்ட நடிகர்.. இந்த உருட்டு கொஞ்சம் ஓவரா இல்லையா?

Trending News