திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் போட்ட ரஜினி.. ஜெயிலர் பிரமோஷனுக்காக இப்படி ஒரு உருட்டா!

Sivakarthikeyan-Rajini: பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்போடு, தெறிக்க விட்டு வரும் படம் தான் மாவீரன். அதைத் தொடர்ந்து தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வரும் இவருக்கு சூப்பர் ஸ்டாரிடம் இருந்து போன் வந்ததன் குறித்த தகவலை இத்தொகுப்பு காணலாம்.

நாளை திரையில் வெளியாக போகும் ஜெயிலர் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இப்படம் குறித்த ஆடியோ லாஞ்சில் பேசிய ரஜினி, விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வசூலை அள்ளிய படமான பீஸ்ட் குறித்து புகழ்ந்து பேசினார். ஒருபுறம் இவர் பேசியது இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தாலும், இந்த சமயத்தில் அதை குறித்து ஏன் பேச வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைக்கின்றது.

Also Read: உயிர் நண்பன் ரகுவரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.. கண்ணீருடன் அவர் அம்மா சொன்ன காரணம்

ரஜினியை பொறுத்தவரை எந்த படம் வெளிவந்தாலும் அதை பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை அவர்களிடம் பேசுவது வழக்கம். மேலும் பாராட்டுவதில் பாரபட்சம் பார்க்காதவர். இந்நிலையில் மாவீரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் செய்து புகழ்ந்துள்ளார்.

படம் பார்த்ததாகவும் அப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை முழுமையாக கொண்டாடியதாகவும் கூறினார். மேலும் வித்தியாசமான கதையை மேற்கொண்டு வெற்றி காண்பதற்கு பாராட்டையும் தெரிவித்தாராம். இவரின் பாராட்டை கேட்டு தற்போது சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read: 5 பெரிய ஹீரோக்களுக்கு மரண ஹிட் கொடுத்த பி வாசு.. அப்பாவியான பிரபுவுக்கு 365 நாட்கள் ஓடிய படம்

தற்பொழுது சோசியல் மீடியாவில் இதைக் குறித்த பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. அவ்வாறு படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது மாவீரன் படம் பார்த்த ரஜினி, சிவகார்த்திகேயனை புகழ்வதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற முனைப்போடு நெட்டிசன்கள் இத்தகவலை பரப்பி வருகின்றனர்.

மேலும் இது ஏன் ஜெயிலர் படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் ஆக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தையும் முன் வைத்து வருகின்றனர். இவ்வாறு சிவகார்த்திகேயனை பாராட்டி பேசினால் அவரின் ரசிகர்களும் தன் படம் பார்க்க வருவார்கள் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு இருப்பாரோ எனவும் பேசப்பட்டு வருகிறது.

Also Read: நிஜத்திலும் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி.. காதலியை கழட்டி விட்டு விவாகரத்து நடிகையுடன் செட்டிலான ஹீரோ

Trending News