Rajini-Mari Selvaraj: உண்மைக்கு நெருக்கமான கதைகளை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வரும் மாரி செல்வராஜ் தன் இளமைக்கால சம்பவங்களை வைத்து வாழை படத்தை எடுத்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது.
இயக்குனர் பாலா உட்பட பல பிரபலங்கள் படத்தை பார்த்து எமோஷனல் ஆன சம்பவங்களும் நடந்தது. அதை தொடர்ந்து படம் வெளிவந்த பிறகு நெகட்டிவ் விமர்சனம் எதுவும் இல்லாமல் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் அது கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
முதல்வர் கூட சமீபத்தில் இப்படத்தை பாராட்டி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது ரஜினியும் மாரி செல்வராஜை ஒரு தலை சிறந்த இயக்குனர் என பாராட்டி இருக்கிறார். எப்போதுமே நல்ல தரமான படைப்புகளை அவர் பாராட்ட தவறியது கிடையாது.
சூப்பர் ஸ்டார் கொடுத்த விமர்சனம்
அதன்படி வாழை படத்தை பார்த்த ரஜினி, மாரி செல்வராஜ் அவருடைய இளமை பருவத்திற்கே நம்மை கொண்டு சென்றுவிட்டார். தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்த தரமான படம்.
இப்படத்தில் அந்த சிறுவன் படும் கஷ்டமும் துன்பமும் நாமே அனுபவிப்பது போல் இருக்கிறது. அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் சிறுவனின் அம்மா பையனுக்கு ஒரு வாய் சோறு போடலையே என கதறும் காட்சியும் நெஞ்சம் பதற வைக்கிறது.
இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தன்னை தலைசிறந்த இயக்குனராக நிரூபித்து விட்டார் என வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். அந்த கடிதம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
அன்று பழைய பெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்திருந்த அந்த சிறுவனின் பிஞ்சு கைகளைக் கொண்டே எழுதி இருக்கிறேன். உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார். ரஜினியிடம் இருந்து வாழ்த்து தாமதமாக வந்திருந்தாலும் அடுத்த படத்தில் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வாழை படத்தால் உச்சி குளிர்ந்து போன மாரி செல்வராஜ்
- வாழை என்னோட கதை, உரிமை கொண்டாடும் பிரபல எழுத்தாளர்
- வாழையோடு போட்டி போடும் தங்கலான், டிமான்ட்டி காலனி 2
- ஏழைகளின் வலி, பாலா கட்டிப்பிடித்து கண் கலங்கிய வாழை எப்படி இருக்கு.?