வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விடாமுயற்சி போல் ஆகி விடக்கூடாது.. லைக்காவை யோசிக்க விடாமல் செய்யும் ரஜினி

Rajini, Lyca: லைக்கா தற்போது தமிழ் சினிமாவில் ஆணித்தரமாக கால்பதித்து உள்ளது. இப்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து தலைவர் 170 படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை விரைவில் போட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பூஜை போடாமல் திடீரென படப்பிடிப்பை தொடங்க உள்ளனராம்.

Also Read : ஜெயிலர் கொடுத்த உத்வேகம்.. ரஜினிக்கு வரிசைகட்டி நிற்கும் 3 படங்கள்

அதாவது வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி கோபுரம் ஸ்டுடியோவில் தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்திற்கு ரஜினி பூஜை போட வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். லைக்காவிடம் நேரடியாகவே படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று கூறிவிட்டார்.

அதற்கேற்ப செப்டம்பர் 19ஆம் தேதி தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கி முதற்கட்டமாக பத்து நாட்கள் சூட்டிங் நடக்க இருக்கிறது. மேலும் ரஜினி இவ்வாறு முடிவு எடுப்பதற்கான காரணம் விடாமுயற்சி படம் தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே விடாமுயற்சி படத்திற்கு ஏதாவது ஒரு சிக்கல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Also Read : கமலுக்கு 4 படம், ரஜினிக்கு இரண்டோடு நிறுத்திய பாரதிராஜா.. படுதோல்வியால் சூப்பர் ஸ்டாரை கைவிட்ட இயக்குனர் இமயம்

அதுவும் லைக்கா தான் விக்னேஷ் சிவனிடம் கதை பிடிக்கவில்லை என்று கூறி வேறு இயக்குனரை லாக் செய்தனர். அதன் பிறகு மகிழ் திருமேனியும் ஒப்பந்தம் ஆன நிலையில் படப்பிடிப்பு தற்போது வரை தொடங்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் பூஜை என்று நேரம் கடத்தினால் படப்பிடிப்பு தாமதமாகும்.

அதற்குள் லைக்கா வேறு முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்ற பயத்தில் அவர்களை யோசிக்கவிடாமல் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கி விடலாம் என்று ரஜினி கண்டிஷன் போட்டு விட்டார். மேலும் சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் லைக்காவும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறதாம்.

Also Read : ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

Trending News