வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஒரு மனுசன மட்டம் தட்டி இன்னொருத்தரை புகழ்றது சரியா தலைவரே!. வெற்றி விழாவில் வேதனையில் நெல்சன்

Rajinikanth – Nelson: ஒருத்தர பாராட்டுகிறேன் என்ற பெயரில் ரஜினி பேசிய பேச்சால் காதே புளிச்சு போச்சு என கூட்டத்தில் இருந்தவர்கள் சொல்லும் அளவுக்கு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. புகழ்ந்து பேசுவதும் ஒரு அளவுக்கு இருந்தால்தான் காது கொடுத்து கேட்கும் அளவுக்கு சுவாரஸ்யம் இருக்கும். அதுவும் எல்லை மீறினால் கேட்பவர்களுக்கு முகம் சுளிக்கும் அளவுக்கு தான் மாறிவிடும்.

இப்படி ரஜினி ஓவராக புகழ்ந்து பேசிய ஒரு விஷயம் தான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக போய்க் கொண்டிருக்கிறது. மேலும் இந்த விஷயம் இயக்குனர் நெல்சனை ரொம்பவே வேதனைக்கும் ஆளாக்கி இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் இது போன்று பேசுவதற்கும் முன் கொஞ்சம் யோசித்து இருக்கலாம் என்று நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read:ஜெயிலர் வெற்றியால் காசை வாரி இறைக்கும் கலாநிதி.. கார், சம்பளத்தையும் தாண்டி கோடிக்கணக்கில் செக்

ரஜினிகாந்தின் சமீபத்திய வெற்றி படமான ஜெயிலர் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே இந்த படத்தின் வெற்றியை போதும் போதும் என்கிற அளவிற்கு இந்த பட குழு கொண்டாடிவிட்டது. இதுவும் பத்தாது என்று நேத்து சக்சஸ் மீட்டை வைத்து வேற ஏழரை இழுத்து இருக்கிறது. ஒருவரை கஷ்டப்படுத்தி மற்றொருவரை உயர்த்திப் பேசுவதற்கு இப்படி ஒரு சக்சஸ் மீட்டர் வேறு நடந்திருக்கிறது.

இந்த சக்சஸ் மீட்டில் பேசிய ரஜினிகாந்த் முதலில் ஜெயிலர் படத்தை பேக்ரவுண்ட் மியூசிக் எதுவும் இல்லாமல் பார்த்தபொழுது ரொம்பவும் ஆவரேஜ் ஆகத்தான் இருந்தது. இசை சேர்த்த பின்பு தான் படம் நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் மொத்த வெற்றிக்கும் அனிருத்தின் இசை மட்டும் தான் காரணம், எனக்காகவும், அவருடைய நண்பன் நெல்சனின் வெற்றிக்காகவும் அனிருத் கடுமையாக உழைத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:ஊருக்கு தான் துறவி வேஷம் போடும் ரஜினி.. கலாநிதி மாறனால் அல்லோல்படும் லைக்கா

ரஜினியின் இந்த பேச்சு ஒரு இயக்குனராக நெல்சனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கும். அவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் நேரத்தில், இசை தான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று சொல்வது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. இதேபோன்றுதான் இசை வெளியீட்டு விழாவில் போது நெல்சன் உடன் படம் பண்ண வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள் என்ற ஒரு கருத்தை ரஜினி சொல்லியிருந்தார்.

அதே மேடையில் தான் அனிருத்தை புகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர எல்லாரும் ஏமாற்றுகிறார்கள், அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் ரொம்பவும் குறைவு எனவும் ஓவர் பில்டப் கொடுத்து பேசி இருந்தார். இப்படி போற இடம் எல்லாம் ரஜினி, அனிருத் புகழ் பாடுவது சகிக்கவில்லை.

Also Read:நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

Trending News