திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலைவர் 171ல் கண்டிப்பாக இந்த 4 நடிகர்களும் இருக்க வேண்டும்.. சும்மாவே ஆடும் லோகேஷுக்கு சலங்கை கட்டிவிட்ட ரஜினி

 Thalaivar 171: ஜெயிலர் படத்திலேயே ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் போன்ற எல்லா மொழிகளிலும் இருந்து நடிக்க வைக்கப்பட்டனர் .

இதே போல் லோகேஷ் அடுத்த இயக்கும் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்திலும் ரஜினியின் மனதில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்களாம். சும்மாவே லோகேஷ் ஏகப்பட்ட நடிகர்களை நடிக்க வைப்பார். இப்பொழுது ரஜினி வேறு இப்படி சொல்லிவிட்டால் நிச்சயமாக பல நடிகர்களை தைரியமாக அழைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Also Read: விஜய்க்கு கன்டென்ட் கொடுத்த முத்துவேல் பாண்டியன்.. லியோ மேடையில் சம்பவம் செய்ய போகும் தளபதி

ரஜினி மனதில் இருக்கும் நடிகர்கள் அந்த நான்கு நடிகர்களும் சாதாரணமானவர்கள் அல்ல, பல படங்களில் தரமான சம்பவத்தை செய்தவர்கள். அப்படிப்பட்ட அந்த நான்கு பேரை தான் ரஜினி தன்னுடைய 171 வது படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

முதலாவதாக விக்ரம், மாமன்னன் போன்ற படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிகாட்டிய பகத் பாசில் நிச்சயம் தலைவர் 171 படத்தில் இருக்க வேண்டும் என்று ரஜினி சொல்லிவிட்டார். அதேபோல் பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை பிரமித்து பார்க்க வைத்த பிரபாஸ் , தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் போன்ற நடிகர்களையும் நிச்சயமாக ரஜினி அழைப்பார்.

Also Read: இது மட்டும் ஜெயிலர் ரிலீசுக்கு முன்பு நடந்திருந்தால்.. அண்ணாத்த படத்தை விடமோசமான தோல்வி தான் ரஜினிக்கு

ஏற்கனவே தன்னுடைய படங்களில் டாப் நடிகர்களை எல்லாம் குவித்து சும்மாவே ஆடும் லோகேஷுக்கு சலங்கை கட்டிவிட்டுள்ளார் ரஜினி. ஏனென்றால் ரஜினியுடன் இந்த நான்கு ஜாம்பவான்களும் இணைந்தால் படம் நிச்சயம் தாறுமாறாக இருக்கும்.

எனவே படத்தின் ஸ்கிரிப்டையும் செம ஸ்ட்ராங்காக லோகேஷ் எழுதி இருக்கிறார். மேலும் ரஜினி இன்னும் ஒரு சில படங்களுடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதால் நிச்சயம் இந்த படம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

Also Read: ரஜினி அரசியலை வெறுத்ததற்கு இப்படி ஒரு காரணமா.? ஆன மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க!

Trending News