சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

முப்பதையும் ரிஜெக்ட் செய்த ரஜினி.. ரூம் போட்டு புலம்பித் தவிக்கும் நெல்சன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

பீஸ்ட் திரைப்படத்தால் வந்த கடும் விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் தாண்டி நெல்சன் இந்த படத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்து வருகிறாராம். இதற்கு முந்தைய படங்களில் விளையாட்டுத்தனமாக இருந்ததைப் போன்று இல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறாராம்.

இந்நிலையில் நெல்சன் கதை சம்பந்தப்பட்ட ஸ்கிரிப்ட் அனைத்தையும் ரஜினியிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் ரஜினி விரும்பும் கதை வேறு விதமாய் இருக்கிறதாம். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை பார்த்து ரஜினி மிகவும் பிரமித்து போய் இருக்கிறார்.

மேலும் அவர் தன் நண்பர் கமலுக்கு போன் போட்டு அந்த படம் குறித்து மிகவும் பாராட்டியிருக்கிறார். கமலுக்கு வயதாகிவிட்டாலும் அது தெரியாமல் அவருக்கு ஏற்றவாறு கதை அமைத்து, அவரை ரொம்ப மாசாக காட்டியிருக்கும் விக்ரம் படம் ரஜினியை மிகவும் கவர்ந்துள்ளது.

அதனால் அதே போன்ற ஒரு அதிரடி கதைக்களம் தான் தனக்கு வேண்டும் என்று அவர் நெல்சனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காக இயக்குனரும் தற்போது ஸ்கிரிப்டில் ரஜினிக்கு பிடித்தவாறு சிறு திருத்தங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு அதிரடியான டைட்டில் வைக்கும் முயற்சியிலும் அவர் இருக்கிறார். இதற்காக நெல்சன் சுமார் 30க்கும் மேற்பட்ட டைட்டில்களை ரஜினியிடம் காட்டியிருக்கிறார். ஆனால் அதை எல்லாம் பார்த்த ரஜினி அத்தனை டைட்டிலையும் பிடிக்கவில்லை என்று ரிஜக்ட் செய்து விட்டாராம்.

அதில் ஒன்று கூட ரஜினிக்கு பிடிக்காமல் போய்விட்டதே என்று நெல்சன் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தவித்து வருகிறாராம். இதனால் அவர் தலைவருக்கு பிடித்த மாதிரியான ஒரு டைட்டிலை வைப்பதற்காக தற்போது ரூம் போட்டு யோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Trending News