வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்ன ஒரு கேவலமான தற்பெருமை.. இளையராஜாவின் முகத்திரையை கிழித்த சூப்பர் ஸ்டார்

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து இந்திய இசையின் அடையாளமாகவே திகழ்பவர் இசைஞானி இளையராஜா. இவர் ஏகப்பட்ட தேசிய விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். இருப்பினும் இந்த காலத்தில் இளம் இசையமைப்பாளர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இன்னமும் நிறைய படங்களில் வரிசையாக கமிட் ஆகி கொண்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே இளையராஜாவைப் பற்றிய ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்புகிறது. இதனால் இவரை இளையராஜா என சொல்வதை விட சர்ச்சைகளின் ராஜா என்று நெட்டிசன்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு சமீப காலமாகவே கொஞ்சம் ஓவராகவே திமிரு காட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும் இயக்குநருமான மனோபாலா மறைவை முன்னிட்டு வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூட தற்பெருமை காட்டியது யாராலையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

Also Read: ரஜினி ரிஜெக்ட் செய்ததால் காணாமல் போன சூப்பர் ஹிட் இயக்குனர்.. 100 கோடி வசூல் செஞ்சும் வாய்ப்பே இல்ல ராஜா

ஆனால் பிரபலங்கள் பலரும் இவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்களை காட்டமாக முன் வைக்கின்றனர். அதிலும் இப்போது ரஜினிகாந்த் பற்றி மேடையிலேயே இளையராஜாவின் முகத்திரையை கிழித்த வீடியோ பதிவு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் தான் வள்ளி. இன்றுவரை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நிஜமாகவே அந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார். இதனை நன்கு தெரிந்த ரஜினிகாந்த் மேடையில் பகிரங்கமாக போட்டுடைத்து விட்டார். அதாவது வள்ளி திரைப்படத்திற்கு இளையராஜாவிடம் சென்று இசையமைக்க சொல்லி இருக்கிறார் ரஜினி. அதற்கு இளையராஜா நான் இசை இசையமைக்காமல் கார்த்திக் ராஜா இசையமைத்தால் போதுமா? என கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி நீங்கள் என்ன செய்தாலும் சரிதான் என சொன்னாராம். அதை அடுத்து அந்த படத்திற்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.

Also Read: ரஜினியின் மூத்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு நிலைமையா.. வெளிநாட்டில் மெக்கானிக்காக மாறிய சோகம்

இதனை இளையராஜாவிற்கு முன்பே ரஜினி மேடை ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜினிகாந்த் மேடையில் வைத்து அப்படி சொன்னது இளையராஜாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அது மட்டுமல்ல இளையராஜா இசையமைப்பில் எத்தனையோ பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறது.

அப்படி ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒரு பாடல் தான் வள்ளி படத்தில் இடம்பெற்ற ‘என்னுள்ளே என்னுள்ளே’ என்ற பாடல். இந்த பாடலுக்கு நிஜமாகவே இசையமைத்தது இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா தான். ஆனால் இன்றுவரை அந்த பெருமையை அவருக்கு கொடுக்காமல் இளையராஜா தான் தற்பெருமை காட்டிக் கொண்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய கேவலம் என்று நெட்டிசன்கள் இளையராஜாவை வெளுத்து வாங்குகின்றனர்.

Also Read: இளையராஜா மேல் இருக்கும் தவறான பிம்பம்.. உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்

Trending News