ரஜினி நடித்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்படத்தில் பல சஸ்பென்ஸ் மறைத்து வைக்கப்பட்டதாகவும் கூடிய விரைவில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தை அடுத்து அவர் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என்ற அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது . சிபி சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த புதுமுக இயக்குனர்கள் இயக்கி சமீபத்தில் வெளியாகி வந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
Also read: சூப்பர் ஸ்டார் காதுக்கு போன விஷயம்.. ஜெயிலர் படத்தால் பரிதவிக்கும் நெல்சன்
இவர்களில் ஏதாவது ஒரு இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் ரஜினி ஒரு பத்திரிக்கையில் ராஜா காலத்து வேஷத்தில் இருப்பது போல் புகைப்படம் வெளிவந்தது. இந்த புகைப்படத்தின் மூலம் இவர் ஒரு வரலாற்று கதைகள் நடிக்கப் போவதாகவும் அது மிக பிரம்மாண்டமாக எடுக்கப் போவதாக தகவல் வெளியானது.
தற்சமயம் மக்களிடத்தில் வரலாற்று கதைகள் மீது நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இதற்கு நல்ல ஒரு உதாரணம். அந்த வகையில் ரஜினியும் நடிக்க இருப்பதால் இப்பொழுது புதுமுக இயக்குனர்களுக்கு நோ சொல்லிவிட்டார்.
Also read: 45 வருஷமாக உடைக்க முடியாத ரஜினியின் சாதனை.. மிரண்டு போன திரையுலகம்
இப்பொழுது தன்னை ராஜாவாக நடிக்க வைத்த இயக்குனருடன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் வேற யாரும் இல்லை இவருக்கு மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பி.வாசு தான். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து லைக்கா தயாரிக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினி ஏற்கனவே சந்திரமுகி 2 படத்தில் நடிக்காமல் போனது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதன் காரணமாகவே பி. வாசு அவருக்கான பிரம்மாண்டமான கதைகளத்தை அமைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து குடுக்க இருக்கும் இந்த படமானது மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது சந்தேகம் இல்லை.