திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வியாபாரத்திற்கு வந்த சிவாஜியின் அன்னை இல்லம்.. ரஜினி செய்த பெரிய உதவி

Super Star Rajinikanth: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் என்று சொன்னால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களை இல்லை என்று சொல்லலாம். சிவாஜி கணேசன் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த இந்த வீட்டில் சினிமா கலைஞர்களின் கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம். சிவாஜி கணேசன் இருந்தவரை அந்த வீடு அவ்வளவு பிசியாக இருந்திருக்கிறது.

இன்று வரை நிறைய சினிமா கலைஞர்கள் அன்னை இல்லத்திற்கு சென்று வந்த அனுபவத்தை பற்றி பேசும்பொழுது ரொம்பவும் வியப்பாகத்தான் பேசுவார்கள். அந்த அளவுக்கு சிவாஜியின் குடும்பத்தினரும், அந்த வீடும் தமிழ் சினிமாவோடு ஒன்றி போய் இருந்தது. இன்று வரை சிவாஜியின் குடும்பம் அந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.

Also Read:எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு பிரபு சினிமாவில் வளர்ந்து விட்ட ஹீரோவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. இதனால் இவர்களுக்கு நிதி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து அன்னை இல்லத்தை விற்று விடலாம் என்று முடிவெடுத்து, செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு உடனே பிரபுவின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். மேலும் எதனால் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள் என்று கேட்டு, அவர்களுடைய பொருளாதார பிரச்சினையை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார். மேலும் அந்த வீட்டை விற்காத அளவிற்கு இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read:ஒரிஜினல் சக்சசை ரகசியமாய் கொண்டாடிய ஜெயிலர் படக்குழு.. ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு ரஜினி பார்த்த வேலை

அந்த நேரத்தில் ரஜினி பண்ண வேண்டிய படம் தான் சந்திரமுகி. அந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை சிவாஜி மூவிஸ்க்கு கொடுத்திருக்கிறார். மேலும் நடிகர் பிரபு இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு பிரபுவுக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதுவரை கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த பிரபு செகண்ட் ஹீரோ என்ற வாய்ப்பையும் பயன்படுத்த ஆரம்பித்தார்.

மேலும் ரஜினி நடித்த சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை இந்த படம் ஓடியது. எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்தது. ரஜினிக்கு அவருடைய சினிமா கேரியரில் இந்த படம் முக்கியமான படமாக மாறியதோடு, அன்னை இல்லத்தையும் காப்பாற்றி இருக்கிறது.

Also Read:அம்மாடியோ! ஜெயிலர் ஓடிடி உரிமை இத்தனை கோடியா.? தட்டி தூக்கிய நிறுவனம், ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

Trending News