வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

200 மடங்கு எனர்ஜியுடன் களத்தில் நிற்கும் ரஜினி.. வாரிசுகளால் வந்த விடிவு காலம்

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் எப்போதும் சிரித்த முகத்துடன், இரு மடங்கு எனர்ஜியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.

அவருடைய பேச்சிலும் ரொம்பவே குதூகலம் தெரிகிறதாம். ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் வீட்டில் கொஞ்சம் நல்ல நிறையவே பிரச்சனைகள் இருந்து வந்தது. அவருடைய மூத்த மகள் தன் கணவர் தனுஷை பிரிய போகிறேன் என்று கூறியதிலிருந்து அவர் தீராத மன உளைச்சலில் இருந்தார்.

Also read:இந்த 4 படத்தின் தழுவல் தான் ஜெயிலர் படம்.. சர்ச்சையில் சிக்கிய நெல்சன்

பெரியவர்கள் எவ்வளவு பேசியும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் முடிவிலிருந்து மாறவில்லை. இப்படி பெரும் சோகத்தில் இருந்து வந்த சூப்பர் ஸ்டார் தற்போது அதீத மகிழ்ச்சியில் இருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் ஏற்கனவே ஒரு மகனுடன் இருக்கும் சௌந்தர்யா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதிகளுக்கு ஒரு வாரிசு பிறந்துள்ளது. அந்த வகையில் ரஜினி பேரன் பிறந்த தருணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

Also read:போலீஸ் தேடும் குற்றவாளிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி.. ஜெயிலர் படத்தில் நடிக்கும் நிஜ அக்யூஸ்ட்

அது மட்டுமல்லாமல் அவருடைய மகிழ்ச்சிக்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை அறிவித்தார்களே தவிர இதுவரை வக்கீல் நோட்டீஸ் எதுவும் அனுப்பி கொள்ளவில்லையாம்.

மேலும் அவர்களுடைய மூத்த மகனின் பள்ளி விழாவில் கூட இருவரும் சேர்ந்து கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ரஜினிக்கு வந்துள்ளது. அதனால் தான் அவர் தற்போது சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read:லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்

Trending News