இருவரின் பிரிவை தாங்க முடியாத நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ மேடையிலேயே கண்கலங்கிய ரஜினி

rajinikanth-actor
rajinikanth-actor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக ரஜினி பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். மிகவும் நெருங்கிய வட்டாரத்தினர் விரும்பி கேட்டால் மறுக்காமல் விழாவை சிறப்பித்து தருவார். அப்படி சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரஜினி உருக்கமாக பேசியிருந்தார்.

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான மீனா அதன் பின்பு டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது வரை இளைஞர்களின் மனதில் மீனாவுக்கு என்று தனி இடம் உள்ளது. இந்நிலையை சினிமாவில் மீனா நுழைந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Also Read : என் கேரியரை வளர விடாமல் தடுத்த நயன்தாரா.. ரஜினியுடன் நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட நடிகை

இதில் சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதாவது ரஜினி நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருந்தார்.

அதன்பின்பு எஜமான், முத்து போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாகவே மீனா நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சமீபத்தில் நடந்த மீனா 40 நிகழ்ச்சியில் தன் வாழ்வில் நடந்த விஷயங்களை மீனா பேசியிருந்தார்.

Also Read : மண்டபத்திற்காக பெரிய கையுடன் மோதிய ரஜினி.. எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

இப்போது என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேரை இழந்ததை நினைத்து வருந்துவதாக கூறியிருந்தார். அதாவது மீனாவின் அப்பா மற்றும் கணவர் இரண்டு பேரின் இறப்பு அவரால் ஏற்றுக் கொள்ள முடியாததை பற்றி பேசி இருந்தார். இதை உற்று கவனித்த ரஜினி தன்னையும் மீறி கண்ணீர் சிந்தினார்.

அதன் பிறகு பேசிய ரஜினி மீனாவை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் எல்லோர் கூடவும் அவ்வளவு நட்பாக பழகக்கூடியவர். இப்போது வரை தமிழ் ரசிகர்கள் மீனாவை கொண்டாடி வருகிறார்கள் என்று ரஜினி பேசியிருந்தார். கடைசியாக யார் கண் பட்டதோ தெரியவில்லை மீனாவுக்கு இப்படி நடந்து விட்டது. யாரும் இதை நினைத்து கூட பார்க்கவில்லை என மனம் உடைந்து ரஜினி பேசி இருந்தார்.

Also Read : ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. 21 வருட தவத்திற்கு கிடைத்த பலன்

Advertisement Amazon Prime Banner