சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வயசானாலும் சீற்றம் குறையாத சிங்கமாய் ரஜினிகாந்த்.. மோடி முதல் சந்திரபாபு வரை தலைவருக்கு விடும் தூது

Rajini big Respect: நடத்த முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக அபார வெற்றி பெற்று தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தான் என்று இந்த தேர்தலில் நிரூபித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

கடும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாட்டில் போட்டி போட்ட பிஜேபி 11 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மற்ற இடத்தில் எல்லாம் பிஜேபி தன்னுடைய பெரும்பான்மையின் நிரூபித்து மத்தியில் ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது

நாம் தமிழர் கட்சி இந்த முறை எட்டு சதவீத வாக்குகளை பெற்று தங்களுடைய சின்னத்தை தக்கவைத்துக் கொண்டு கம்பீரமாக செயல்பட்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஸ்டேடிலும் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைப்பதற்கு ஆவண செய்து வருகிறார்கள்

மோடி முதல் சந்திரபாபு வரை தலைவருக்கு விடும் தூது

வருகிற 12-ஆம் தேதி ஆந்திராவில் முதலமைச்சர் ஆகும் சந்திரபாபு நாயுடு தன் நெருங்கிய நண்பரான ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வேறு எந்த ஒரு நபருக்கும் அழைப்பு இல்லாத பட்சத்தில் ரஜினிக்கு மட்டும் அழைப்பு வந்தது அவருக்கு பெரிய கவுரவம் தான்.

இது ஒரு புறம் இருக்க பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக வரும் 9ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். அதற்கும் தமிழ்நாட்டில் இருந்து ரஜினிக்கு மட்டும் அழைப்பு வந்திருக்கிறது. எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத மதிப்போம் மரியாதையும் தமிழ்நாட்டில் ரஜினிக்கு மட்டும் கிடைத்து வருகிறது.

சிறுவயதிலிருந்தே சந்திரபாபு நாயுடு உடன் நெருங்கி பழகிய ரஜினிகாந்துக்கு இந்த அழைப்பு வந்தது ஆச்சிரியம் இல்லை ஆனால் பிரதமர் மோடியிடம் இருந்து வந்த அழைப்பு தமிழ்நாட்டிற்கே பெரும் கௌரவமாக பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் இன்னும் சிங்கம்போல் தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் சாணக்கியனாய் பார்க்கப்படும் ரஜினி

Trending News