70 வயதிலும் 25 வயது பையன் போல் பம்பரமாய் சுற்றி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதற்கு உதாரணம் தற்போது ரஜினி நடித்து வரும் கூலி படம் தான். வயதாகி விட்டது தலைவரால் முடியாது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் நடிக்கும் பல காட்சிகளுக்கு டூப் போட திட்டம் போட்டுள்ளார்.
கூலி படத்தின் செட்டுக்குள் போகும்பொழுதே ரஜினி போட்ட முதல் கண்டிசனே ஏ ஐ தொழில் நுட்பம் வேண்டாம் என்பதுதானாம். இப்படி தானே ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். லோகேஷ் திட்டம் போட்ட நாட்களுக்கு முன்னரே ரஜினி தன்னுடைய போர்ஷனை முடித்து விட்டாராம்.
பல இளம் ஹீரோக்கள் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்பட்டாலும் அவர்களுக்கு இன்று வரை இடம் கொடுக்காமல் இருக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு வெற்றியும், தோல்வியும் தன்னை மட்டுமே சேர வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறதாம். அப்படி ரஜினியுடன் நடிக்க ஆசைப்பட்டு இன்றுவரை நிறைவேறாமல் ஏங்கி கிடக்கும் 3 நடிகர்கள்.
தனுஷ்: எப்படியாவது ரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்று காலா படத்தில் இருந்து திட்டமிட்டு வருகிறார். ஆனால் இவருக்கு இன்று வரை பிடி கொடுக்காமல் ரஜினி காய் நகர்த்தி வருகிறார். பல முக்கியமான ஆட்கள் மூலமாக தூது விட்டும் இது நடக்கவில்லை.
காளிதாஸ் ஜெயராம்: இவர் கொடுக்கும் பேட்டிகளில் அனைத்தும் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு பறிபோனது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ரொம்ப நாட்களாகவே தலைவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாம். ஜெயிலர் படத்தில் மகனாக நடிக்க வந்த வந்த வாய்ப்பும் பறிபோனதாம்.
சிவகார்த்திகேயன்: ரஜினியை ரோல் மாடலாக வைத்து அவர் பாணியில் அசத்தி வருபவர் சிவகார்த்திகேயன். பல சாயல்களில் இவரிடம் அந்த காலத்து ரஜினிகாந்தை பார்க்கலாம். இவருக்கும் நீண்ட நாட்களாக சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது.