வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலரை போல் வெற்றி கொடுக்க பாடுபடும் ரஜினி.. அமிதாப்பச்சன் தலைவருக்கு வச்ச செக்

Thalaivar 170: ரஜினி தற்போது ஆட்டநாயகனாகவும், வசூல் மன்னனாகவும் ஜெயித்து உயரத்தில் இருக்கிறார். அதற்கு இவர் இதுவரை நடித்த எத்தனையோ படங்கள் காரணமாக இருந்தாலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தது தான் மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. அதற்கு காரணம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களுக்கு நடுவில் நெல்சன் உடன் கூட்டணி வைத்து வசூல் அளவில் சாதனை புரிந்தது தான்.

இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் ராஜாவுடன் தலைவர் 170 படத்தில் கமிட்டாய் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு படுஜோராக கன்னியாகுமரியில் நடைபெற்றது. அந்த வகையில் கிட்டத்தட்ட 15 நாட்கள் சூட்டிங் அங்கே நடத்தி வெற்றிகரமாக முடித்து விட்டார்கள். இதற்கு அடுத்து ஆயுத பூஜை தினத்தை ஒட்டி பத்து நாள் ஓய்வு எடுத்துக்கலாம் என்று ரஜினி முடிவெடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு வழி இல்லாமல் தற்போது மும்பையில் படப்பிடிப்புக்கு போய்விட்டார். அதற்கு காரணம் அமிதாப்பச்சன் இந்த தினத்தில் தான் கால் சீட் கொடுத்திருக்கிறார். இதனால் இதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ரஜினி மாட்டிக்கொண்டார். காரணம் இவர்கள் இரண்டு பேரும் நடிக்கும் இந்த காட்சிகள் ரொம்பவே முக்கியமானதாம்.

அதனால் அமிதாப்பச்சன் கால் சீட் கொடுக்கும் போது எடுத்திடலாம் என்று படக்குழு முடிவு பண்ணி ரஜினியை கூட்டிட்டு போய் விட்டார்கள். இந்தப் படப்பிடிப்பை முடித்த பின்பு அடுத்து ரஜினிகாந்த் மறுபடியும் பெங்களூர் செல்ல இருக்கிறார். இதனால் கொஞ்சம் கூட ரெஸ்ட்டை எடுக்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்.

அதே நேரத்தில் தற்போது லியோ படமும் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், இந்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஜினி பிளான் போட்டிருக்கிறார். அதாவது ஏற்கனவே ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்றதால், இதைவிட தலைவர் 170 படம் மக்களின் ஆதரவை பெற வேண்டும்.

இந்த காரணத்திற்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை என்று ரஜினி பாடுபட்டு வருகிறார். அவர் கேட்டுக்கொண்ட ஒரே விஷயம் படம் நல்லபடியாக இருக்கணும். ஜெயிலர் வசூல் சாதனையை விட அதிகமாக இருக்க வேண்டும். அதே மாதிரி மக்கள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் இதுதான் இவருடைய நோக்கம். அதற்காக தான் ரஜினி பாடுபட்டு வருகிறார்.

Trending News