திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

40 வயசு கொள்ளை அழகுடன், துள்ளலான சிரிப்புடன் உலா வரும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Rajini In Thalaivar 170: திறமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கலாம் என்பதற்கு உதாரணமாக சூப்பர் ஸ்டார் தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் தாறுமாறான வெற்றியை அடைந்து கிட்டத்தட்ட 600 கோடி வசூலை அடைந்திருக்கிறது.

அத்துடன் இந்த சூட்டோடு சூட்டாக அடுத்த படத்தையும் நடித்து முடித்து விட வேண்டும் என்று ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு இணைந்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த புகைப்படங்களை இப்படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம் அவர்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியது.

Also read: விஜய் மீது வைக்கப்படும் ரெண்டு குற்றச்சாட்டு.. உஷாராகி ஒதுங்கிய சூப்பர் ஸ்டார்

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டே வருகிறது. அதில் சிங்கப்பெண்களாக இருக்கும் துஷ்ரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் கமிட் ஆகி இருக்கிறார்கள். அத்துடன் இப்படத்திற்கு டெரர் வில்லனாக பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

மேலும் வழக்கம் போல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படி முக்கியமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிட்டது. அதில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினியை பார்க்கும் பொழுது 40 வயது இளமையுடன் இருந்த சூப்பர் ஸ்டாரை பார்ப்பது போல் இருக்கிறது.

Also read: 37 வருடங்களுக்கு முன்பே விஜயகாந்துக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டம்.. தேவையே இல்லைன்னு தூக்கி எறிந்த கேப்டன்

அதிலும் துள்ளலான சிரிப்பு, கொள்ளை அழகுடன் சிங்கம் மாதிரி உலா வருகிறார். என்னதான் மேக்கப் டெக்னீசியங்களை வைத்து இந்த மாதிரி மாற்றியமைத்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே வெளித்தோற்றத்தை அழகாக காட்ட முடியும். அந்த வகையில் எப்போதுமே ரஜினி, சூப்பர் ஸ்டார் தான் என்று சொல்வதற்கு ஏற்ப அசத்துகிறார்.

இதற்கிடையில் இப்படத்தின் டைட்டில் வேட்டையனாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து கூடிய விரைவில் இப்படத்திற்கான ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிட்டு படத்தின் டைட்டிலையும் கன்ஃபார்ம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 170 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

rajini-latest-shoot-spot-picture
rajini-latest-shoot-spot-picture

Also read: மொக்க கதையை செலக்ட் செய்து மண்டையை சொரியும் 5 நடிகர்கள்.. பரிதாபத்திற்குரிய அகில உலக சூப்பர் ஸ்டார்

Trending News