புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுக்கும் ரஜினி.. ரோலக்ஸ் செய்யப் போகும் சம்பவம்

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்திற்கான கதைகளை ஒவ்வொரு இயக்குனரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  பிறகு இவரின் சாஷ்டாங்க குரு பி.வாசு இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாக வந்தது.

ஆனால் இப்பொழுது ரஜினி, இயக்குனர் டி.ஜே.ஞானவேல் படத்தில் நடிக்கப் போவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.  இந்த இயக்குனர் ஏற்கனவே சூர்யாவை வைத்து கடந்த வருடம் ஒரு வெற்றிப்படமான ஜெய் பீம் படத்தை அனைவரும் பாராட்டக்கூடிய படமாக கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்பொழுது ரஜினி வைத்து இயக்க உள்ளார்.

Also read: தோல்வி பயத்தை காட்டிடாத நெல்சா.. ஜெயிலர் படத்தில் இறங்கிய அடுத்த பாலிவுட் நடிகர்

இதற்கான கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். இந்த கதையானது ஹீரோயிசம் காணப்படும் கதையாக இல்லாமல் ஜெய் பீம் போன்று எதார்த்தமான படமாக இருக்கப் போகிறதாம். இதனாலையே இந்த கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துப் போக இதற்கு உடனே ஓகே சொல்லி விட்டார்.

மேலும் இந்தப் படத்தில் சூர்யாவும் ஒரு சீனில் வரவைத்து இந்தப் படத்தை மேலும் மெருகேற்றலாம் என கூறி இருக்கிறார் இயக்குனர். இதனைக் கேட்ட ரஜினி உடனே சரி என்று சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் கமல் படத்தில் சூர்யா ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுத்தது.

Also read: ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த ரஜினி.. அந்த ஒரு வார்த்தையால் சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார்

அதே போலவே இந்தப் படத்திலும் சூர்யா வந்தால் இது மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்று நினைத்திருக்கிறார். அதனால் கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுத்து இந்த முறை வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி.

மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ஜெய் பீம் பட இயக்குனர் மற்றும் சூப்பர் ஸ்டார் இணையும் இந்த கூட்டணியில், சூர்யா ரோலக்ஸ் ஆக செய்ய போகும் சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப்போகிறது.

Also read: ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயின்.. 46 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

Trending News