வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இனி என் அகராதியில் தோல்விக்கே இடம் கிடையாது.. பிளாப் படத்திற்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினி

தற்போது ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு பல எதிர்பார்ப்புகளை முன் வைக்கின்றது. அதைத்தொடர்ந்து அவரின் அடுத்தடுத்த படங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் தன்னுடைய தோல்வி படங்களை வைத்து மீண்டும் ஒரு ரிஸ்க் எடுக்க இருக்கிறாராம்.

என்னவென்றால் 2002ல் வெளிவந்த பாபா படம் மக்களின் போதிய வரவேற்பை பெறாததால் தோல்வி கண்டது. அதன் பின் ரஜினியின் 72வது பிறந்தநாளில் மீண்டும் சில மாற்றங்களோடு அப்பறம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதுவும் மக்களின் போதிய ஆதரவை பெறாமல் குறைந்த வசூலை பெற்று தந்தது.

Also Read:படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிய கார்த்திக்.. ரஜினி படத்தால் யாரும் எதிர்பார்க்காமல் கிடைத்த வாய்ப்பு

இருந்தாலும் ரஜினி இப்போது தான் நடித்த வேறு ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்ய சம்மதித்திருக்கிறார். 2016ல் பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் கபாலி. இது சில விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தப்பித்துக் கொண்டது. ஆனால் இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம்.

இதை கருத்தில் கொண்டு தற்பொழுது வேறு சில மாற்றங்களுடன் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு. மேலும் ரஜினி தன் அகராதியில் இனி தோல்வியே இருக்கக் கூடாது என இது போன்ற படங்களை தூசி தட்டி எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

Also Read:இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

அதன்படி தோல்வி படங்களில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்து மீண்டும் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். மேலும் இது போன்ற தவறு இனி ஏற்படக்கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளார். இப்போது தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுக்கும் இவர் தன் தோல்வி படங்களையும் வெற்றியாக மாற்ற முயற்சி செய்கிறார்.

அந்த வரிசையில் லிங்கா படத்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்தார்கள். அதனால் பாபா, கபாலி படங்களை தொடர்ந்து இந்த படமும் எப்போது வேண்டுமானாலும் ரீ ரிலீஸ் ஆகலாம். ஆனால் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதுதான் கேள்விக்குறி.

Also Read:வாரிசு நடிகருக்கு வில்லன் வாய்ப்புக்கொடுத்த ரஜினி.. ரஜினி இல்லைனா இன்னைக்கு இவர் இல்ல

Trending News